மாலைக் கதிர்
அந்தி சாயும் சூரியன்
அநியாயமாய் சிவக்கிறான்
இடைமறித்த மேகங்களின்
எதிர் போரை கண்டதும்.
நாளை விடிவு தர முடியாதோ
இந்நாளே என் நாளின்
இறுதி நாள் ஆகிவிட்டால்
என்ன செய்வதெஎன்று
ஏக்கத்தோடு மறைகிறான்
எதிர்பார்க்கிறேன்
நாளை விடியலில்
ஏக்கங்கள் புன்னகையாய் மாறி
அவன் பிரகாச ஒளியைக் காண
Comments