மழைக்கால தொடர் கதை
ஈரத் தென்றல்
எனை மீறிச் செல்ல
இரவுச் சந்தன மேகங்கள்
பன்னீர்ப் போல
சந்தக்கவிமழை தூவிச்செல்ல.
சூடாகிய மண்டையோட்டுக்கு
விடையானது மழையின் சுவடு - அதன்வழி
வந்த உள்ளக் குளிருக்கு
உடையானது தேநீர்ச் சூடு.
அரைகுறை மூச்சிழுத்து
பழகிய எனக்கு
ஆழப் பெருமூச்சு
அடிவயிற்றை தொட்டவுடன்
அங்கமெல்லாம் சிலுசிலுத்த
அக்கணத்தொரு ஒளித் திருடன்
வெடியைப் பற்ற வைத்துப் பதுங்கியதும்
வெடித்தவுடன் இடியாச்சு
இப்படியே இரவு கழிந்து
கதிர் வராமலேயே
விடிஞ்சாச்சு....
இது மழைக்காலத் தொடர் கதையாச்சு.
Comments