அடுப்பாங்கரை
உன் அடுப்பாங்கரையின் வெப்பம்
உனக்குள் இருக்கும் கோபமாய்
அடுப்பாங்கரையின் அலங்கோலம்
உன் மனதில் மாறா காயமாய்
அடுப்பாங்கரையில் அவிந்த வாசம்
உன் உள் ஐச் சமைத்த பொறுமையாய்
அடுப்பாங்கரையின் அலமாரி
உன் அவசர புத்தி அடுக்குகளாய்
அடுப்பாங்கரையின் அடுப்புத் தீ
உன் ஆசைக்கு இட்ட கொள்ளித் தீயாய்
தலையில் நீர்ப் பட
சிலரின் தேகம் குளிரும்
பெண்ணானவளுக்கு
தலையில் நீர்ப் பட
வியர்வைச் சொட்டும்
அடுப்பாங்கரை அனல் தணிக்க
தூங்கும்முன் தலை
நீரைத் தாங்கும்
பாவம் அடுப்பாங்கரைக்கு
அவள் மேல் என்றும்
அவளே, அறியா வகையில்
ஒருதலைக் காதல் .
Comments