ஆண்டு விழா
ஆடிப் பாடும் ஆசையுடன்
மேடை ஏறும் குழந்தைகளுக்காய்
கூடுகிறதொரு கூட்டம்.
பள்ளிப் படிப்பும்
பழகும் நட்பும்
நினைத்துப் பார்க்க
சுகமாய்த் திகழ
ஒவ்வொரு ஆண்டும்
விழா எடுக்கும்
திறமையின் அங்கீகாரமும்
உழைப்பின் உன்னதமும்
வெற்றியின் ருசியும்
விடாமுயற்சியின் பிறப்பும்
குழந்தைத் தொட்டு
குடும்பப் பிணைப்பும்
வளர்ந்தோர் நினைவில்
வருகிற
பள்ளிக் காலப்
பழைய நினைவென
மனித வாழ்க்கையில்
எல்லாவற்றையும் கொண்டாடிப் பழக
கற்றுக் கொடுக்கிறது
ஆண்டு விழாக்கள்.
Comments