சூடு
வீதியைப் பார்க்கிறேன்
உதித்து மறையும் சூரியனின்
சூட்டை உணர்கிறேன்
உதிக்கிறது சிந்தை
இப்படித் தானே இருக்கும்
ஓயாமல் உழைக்கும்
உள்ளங்களில் உள்ளிருக்கும்
ஒவ்வொரு வேளைச் சோற்றுக்கும்
துடிக்கும் வயிற்றில்
தணியா நெருப்பு
செத்து எரிக்கும்
கொள்ளியை விட
வாழும் போதே சாகும்
Comments