ஆணுக்குள்
அடைப்பட்ட இடத்தில்
அலைப்பாயும் மனதை
அடக்காமல் கொஞ்சம்
அழகாகக் கெஞ்சும்
திரைகளைத் தொட்டதும்
திரிகிற எண்ணங்கள்
திணரும் போது
திருந்தத் தவறும்
ஆசை உணர்வால்
ஆளைக் கொள்ளும்
ஆழ்ந்த மாயை
ஆணின் காமம்
உளத்தைத் தந்து
உறவில் நுழைய
உயிர் ஆகிறது
உடையவன் காதல்
தேவை யாதெனத்
தேடித் தீர்ப்பவன்
தேடப் படுகிற
தேவையர்த் தலைவன்
Comments