சன்னலோரம்
பேருந்தின் சன்னல் ஓரத்தில்
பேசிக்கொண்டே வருகிறேன்
என்னுடனே நான்
வருடங்கள் வேகமாய் ஓடுவது கற்பனை
சில நிமிட சிந்தனை மட்டும்
பல வருட காட்சிகளை காட்டுவது
எத்தனை ஏக்கம் அத்தனையும்
சுற்றத்தின் தாக்கம்
கட்சிகளின் வண்ணக் கொடிகள்
சாலையை அலங்கரிப்பதை
சட்டனெ பார்க்கும் போது
நீ சாதித்ததென்ன என்று
பட்டென அறைகிறது
வெற்றியின் விடா முயற்சி.
சிலநேரப் பயணம்
இயக்கத்தில் நிறுத்திய
வாகனத்தின் இதயக் குமுறலாகிறது
உழைப்பவனை தூற்றும் ஊரார் வாய்கள்
சாதனையை விட சிறந்ததாகிறது
குறுகிய நேரப் பயணத்தில்
சன்னலில் புகும் காற்றென நினைப்பதற்குள்
தாமதமாகிறதென திட்டித் தீர்த்தத் தாயின் குரலை
பதிவிடுகிற தொடுதிரைக் கைப்பேசியின்
செவிக்கான ஒலிபெருக்கி
Comments