பிள்ளை

தத்தி வந்து 
முத்தம் தரும்
மொத்த அழகாமே

திக்கி வரும் 
வார்த்தைகளே
திகைக்க வைப்பாமே

விழி அசைவே 
காவியத்தை
விளிக்கும் மொழியாமே

அன்னம் தின்னும் 
வேளை அதைக்- கன்னம் 
தின்பதழகாமே

சத்தந் தரும்
பொம்மைகளே
சந்தோசமாமே

நித்தம் பல 
சேட்டைச் செய்யும் 
பிள்ளையது
பெற்றோரின் பெருந்தவமாமே

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...