தாடி
மெல்லியதாய் அடர்ந்து
வண்ணங்கலளால் வசீகரிக்கும்
எச்ச கழிவுகள் கூட
சிலருக்கு உச்ச அழகைத் தரும்
நீளம்
குட்டை
தட்டை
வடிவுகளில்
மற்றோரைக்
கவர
முகத்தோடு
முளைத்து
அழுக்கானாலும்
ஆணுக்கழகாகிறது
புள்ளிங்கோக்களின் பொழுது போக்கோ
?
நிராகரிப்பின் நினைவோ ?
வேண்டுதலின் விளைவோ ?
தெரியாமல்
தவிக்கிறேன்
ஆணின்
முகம்
பலரின்
மனங்கவரும்
சிறிய
அளவிலான
மயிர் நிறை உலகோ
Comments