இருட்டு
கதிரவன் மறைந்ததும்
காரிருள் படர்வதும்...
கரு உருவாகிட
சினை முட்டைக்குள் சிறந்ததும்...
உள்ளொளித் தேடலில்
உடனடியாவதும்...
சிக்கல் நேரத்து
சிறந்த முடிவின் முன்
உருவாவதும்...
முந்தி வரும் விந்ததுவோ
கருப்பையைத் தொடுவதும்
கருமுட்டைக்குள் சமாதி செய்து
பத்து திங்கள் விடுவதும்
உறங்குகிற வேளையில்
விழிக்காமல் தெரிவதும்
விழிக்கும் வேளையில்
விடியாமல் இருப்பதும்
விழித்தும் விழிக்குப்
புலப் படாதவர்க்கும்
விதியாய் அமைந்த
விடையாம் இருட்டு
Comments