அவள்
கூந்தல்
கிளப்பிய வாசமோ
வகுடெடுத்து வாரிய
வாலிபத்து மோகமோ
உச்சி முகர்ந்து
உளமார முத்தம்
தந்ததுமென் தலை
தலைகீழாய் சுத்தும்
முகம்
ஏந்திய கைகளில்
தாங்கிய பூவோ
பூ போல் மலர்ந்த
புன்னகை முகமோ
அவள் - மனங்கவர் மங்கை
என் பாவம் போக்கிட
அன்பை பொழியும்
கருநிற கங்கை.
கை
வளையல் கையில்
எழுந்த ஒலியோ
இதயத் துடிப்பின்
காதல் மொழியோ
கரமுரச ஆசை
காதல் கண்ணை
மறைக்கும் பொழுதும் அவளின்
கரம் பிடிக்க ஆசை
கால்
அவளின்
கணுக்கால் மூட்டுக்கு
முகமிருந்தால்
அதில் அவள்
கொலுசின் முத்து மூக்குத்தியாகிருக்கும்
தரைக்கு பாரமாகிற
அவள் பாதம்
எனக்கோ என்றும்
தலையனையாய்
இடை
குழந்தை விளையாடும்
சருக்கு மரமாயில்லாமல்
நான் சருக்கி விழுந்தேன் அது
அவளின் வளைந்த இடை
சேலை முந்தியும்
சுகமாய் சாகிறது
இடைக்கும்
உடை க்கும் இடைப்பட்ட இடத்தில்
Comments