இனி அவள்

காற்றோடு கதை பேசி 
ஒளியோடு உறவாடினேன்
பாதையின் இருளில் 
பயணம் செய்கையில்

வாலிப வரவில் 
வருகிற காதலில்
வந்த தோல்வியைக் 
கடந்து வாழ்கையில்

கரம் பிடித்தவள் - என் 
மனம் பிடித்திட
படும் இடர்களை
தினம் நினைக்கையில் 

பெரும் உளைச்சலை 
தரும் என்செயல்
தவிர்த் துனக்கென
தலை யெடுக்கிறேன்

அன்புப் பயிரில் - என்
செயலால் விளைந்த
இடராய் இருக்கம்
களையைப் பறிக்கிறேன்

இனி(ய/அ)வளுக்காய் 
என்னை அர்ப்பணிக்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை