ஓட்டி

விதவிதமாய் சுழற்றிடுவான் 
விழியை உறுதுணை ஆக்கிடுவான்
விதியோடு விடையாவான்
வினாவாகும் பயணத்தில்

கால்களில் வேகமும்
கைகளில் திசையையும்
கண்களில் கவனத்தையும்
விழிப்புடன் கையாள்வான்

அதி வேகமும் மித வேகமும்
அவனெடுக்கும் முடிவுகளே
ஒத்துழைப்பு தருவதெல்லாம் 
பயணத்தின் பாதைகளே

பந்தயங்கள் சிலநேரம்
அபாயங்கள் பல நேரம்
எதிர் வரவையும் எந்நேரம்
கருத்தாகக் கையாளும்

எதிர் வெயிலும், எதிர் ஒளியும்
எக்குத்தப்பாய் இயக்க வைக்கும்
ஏதோ சில வேளைகளில்
உறக்கம் வந்து மயக்கம் தரும்

நேரத்தில் ஓய்வெடுத்து 
நேரத்தையும் கடைப்பிடித்தால்
அச்சுகமான பயணம்
அழகானத் தருணம்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை