தேர்
சக்கர வண்டியில்
அதிக நெடுங்குச்சி கட்டி
அலங்காரத் துணிக் கொண்டு
அழகாகச் சுற்றுகையில்
மேடையும் வியப்புறு கூடமாகிட
கோவிலுடையவன் கூடம் வந்ததும்
குதிரை பொம்மைக் கட்டிவிட்டு
ஆமை வேகம் கொண்டதனை
கருவிகளின் இசையோடு
நாதத்தின் ஒலி சேர்த்து
நார் திரித்த கயிற்றை
நன்றாகக் கட்டி
நாடிவந்தோர் உள்ளங்கை
நழுவாமல் பற்றிக்
கூடத்துக் குடி கொண்டோன்
நான்கு வீதிச் சுற்றி
எல்லோரின் வாசல் வந்து
உள்ளோர்க்கு உயர்வு தந்து
விதவிதமாய்க் கடை போட்டு
பிழைப்புக்கு வழித் தேடி
உழைப்பாரோடுச்
செல்லும் வழியில்
உன்னையும் திசை திருப்ப
முட்டுக் கட்டை போட்டிடுவார்
தன்னுயிர்க் கொண்டு
உன்னுயிர்க் காத்திடுவர்
அவர்களுக்கும் கருணை செய்
ஆகையினால்
மீண்டும் நிலை அடையும் வரை
வீதிதோரும் சோதி நிலை
Comments