அம்மணம்
தெளிந்த வான் நிலை
கூட்டுப் பொருள்களின் கூடு
குறிகளின் விடுதலை
பிறப்பின் அடையாளம்
மானத்தின் பேறுகாலம்
உறவுள்ள தனியன்
ஆசையற்ற மனம்
சிந்திக்கா மூளை
துறவின் தூய்மை
உடைகளின் உயிர்
வெறுமையின் உச்சம்
கதவில்லா வீடு
இலைகளில்லா மரம்
அலையற்ற கடல்
உயிருக்குதவா காற்று
கருவின் பிறப்பு
இறப்பின் கருச்சுமை
Comments