துயரத்தின் மறு பெயர் ' ரோஹிங்யா '

ஈழத்துப் படுகொலைப்போல்
அங்கும் ஓர் படுகொலையா
அண்டை நாடென்பதாலே
பழிச் சொல் கொடுக்கும் நமக்கும்
அண்ணன் , தங்கை , அம்மை , அப்பன் உறவும் நிலைத்திருக்கும்.

அப்பேர்பட்ட முகமதியவர்க்கும்
எப்பேர்பட்ட கொடுமையடா - அவர்கள்
அழுகுரலாலே அலரும் ஓசை கேட்குதடா - இடிப்போல் 
எங்கள் நெஞ்சில் இனப்படு கொலையது
இருக்கும் உறவை அறுத்துப் போகுதடா.

ஊரைச் சுற்றும் தலைவர்களெல்லாம் 
அவர்கள் காதினில் சங்குகொண்டூதிட வேண்டாமா ?
சோற்றுக்குக் கையேந்திடும் நிலையினை - தடுத்திட
ஓர் குரல் கொடுத்திட வேண்டாமா ?

இந்தியர் என்பதில் எல்லோரும் இணையன்றோ,
எம்முயிர் தோழர்களே அவர்களும் நமது உறவன்றோ,
மதம் மறந்த மனிதத்தில் எங்கள் குரல் கேட்டேனும் நிலை மாறட்டும்,
இல்லையெனில் எங்கள் ஒற்றுமையே இதை மாற்றட்டும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை