' விவசாயம் '

ஏர் பிடிச்சி நீர் உழுத இடமெல்லாம் - வித்துக்கு 
உரமாக உதிர்ந்த உதிர வியர்வை ,
சீர் தூக்கி கட்டுமையா நீ வாழ்ந்த வாழ்வை.

காளைய ஒட விட்டு 
காலமெல்லாம் காத்த நிலம் ,
கார்ப்ரேட்டு காரர்களால் 
காம்ப்பவுண்டு நிலமாகிடிச்சே !

சானமெனும் உரம் தெளிச்சு
சோறு தந்த உழவனுக்கு
உரங்களினால் உயிர் போகும் உயர் நிலை 
உழவனுக்குகந்த நிலை இதுதானா ?

வேகாத வெய்யிலிலே வயலுக்கு பசிக்குமென
வறப்பு எனும் வழி வெட்டி வடியவிட நீர் பாய்ச்சி
பசுமைக்கு பசியாற்றி களிப்படைந்த கண்களில்
கண்ணீர் வழியும் கவலை நிலை ஆனதே .

கிடைக்காத நீருக்கும் கருணையாய் கண்ணீர்
அதைப் பார்த்தும் கிடைக்கவில்லை கர்நாடகத் தண்ணீர்.

விவசாயம் செய்தவனெல்லலாம்
வேலையில்லா வெறும்பயலென
சொல்லும் சொந்தங்களின் வாய்களில் ,
விழும் வாய்க்கரிசியாய் விவசாயம் 
தன் பெருமையை நிலை நாட்டுதம்மா.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை