' இராணுவம் '

உறுதி கொண்டு குருதி சிந்தி உயிர் தருவாய் ,

எதிரிகளை அழித்திடவே நீ பிறப்பாய் ,

பல உயிரும் தாயிடத்தில் பால் குடிக்க ,

நீயோ உன் குருதி சிந்தி தாய் நாட்டிற்கே பால் வார்க்கின்றாய் .

ஆயுதம் ஏந்தி நின்றோரில் 
எங்கள் நாயகனாக திகழ்ந்திடுவாய்

எப்போதும் விழித்திருந்தே  
எதிரிகளை ஒழித்தருள்வாய் .

தீமைக்கு நோயாகி
தேசத்தின் தாயாகி, 

பாயப் பதுங்கும் புலியாவாய்  ,
எதிரியை பார்த்ததும் பற்றும் தீயாவாய் .


உயிர் பறிக்கும் கோழையிடம் ,

உறவுகளை நீ இழந்து உறக்கமதை நீ துறந்து

பசி மறந்து பகைவனின் உயிர் பறித்து - எங்களுக்கு ,

அன்னை காட்டும் நில ஒளியாய்

நீ திகழ்ந்தே இருள் நீக்கி வைப்பாய்

காணியினை கருத்தாக கரு சுமப்பாய்


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே