' பரிதவிப்பில் பெண் பிறப்பு '

முப்பாலும் பசியென்றால் பாலருந்தும் தாயிடமே
அத்தகைய சிறப்பை இங்கு கொண்டது பெண்பாலினமே

அரும்பு மீசை வருவதை வளரிளம் பருவமது சொல்லுமே
ஆசையென துளிர்வதும் காதலென மலருமே

பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் அறிவியலென்றாகுமே
பாலியலால் நாடுமிங்கு நாசமாகிப் போகுமே

களிப்போடு  விளையாடும் குழந்தைக்கும்
கலவி  மோகச் செயலினால் வலிகள் நேர்ந்திருக்குமே

துடிதுடித்த வேளை கண்ணில்
கண்ணீரும் வழிந்திருக்குமே

காமுகனே ஆன்மை உனக்கின்பம் தரக்கூடுமே
பெண் குழந்தைக் கனவை அது சிதைத்து சாகடிக்குமே

நல்லவனா வருவேன்னு தாய் பால் தந்த அவளுக்கும் 
உன்னைப் போன்ற தருதலையால் தலை குனிவு நேருமே

சிற்றின்பத் துக்காக  சிறு பெண்ணுக்கிந்த கொடுமையா
ஆயுளுக்கும் அவள் குடும்பம் வேதனையால் வாடுவது தேவையா

காமத்தை தடுத்திட சுய இன்பமின்றி வேறு இங்கு ஏதையா
காலமெல்லாம் கம்பி எண்ண வைக்கும் கலவி தேவையா

மாரால பால் கொடுத்தா அவளுக்கது புள்ளதான்
மானங்கெட்ட நாய்களால நம்ம நாட்டுக்கே தொல்ல தான் .


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை