' கடற்படை பயங்கரம் '
இது நாடா சுடு காடா ,
எவன் பேரிங்க அந்நியன்டா ,
துப்பாக்கித் தோட்டாவும் ,
துணிந்து கொன்டு துளைத்ததடா ,
அலை மீது வலை வீசீ தள்ளாடும் ,
தாய்க் குலத்தின் உயிர் பறித்ததடா ,
காக்க வேண்டிய கடற் படையே
காவு வாங்கியது அதிரடியே .
உருண்டை வடிவ உலகுதனில் ,
உயிர்கள் ஆடும் சதுரங்க வேட்டையடா,
கோட்டை கூட இதை கண்டு ,
வேடிக்கை தான் பார்க்குதடா ,
கொடுமைகள் அரங்கேருவது ,
வாடிக்கை என் றாகுதடா ,
நாட்டு மக்கள் இவர்களுக்கு ,
அடிமை என்றே எண்ணுதடா ,
தொல்லை தருகிற இலங்கைக்கும் ,
துரோகிகளான இவர்களுக்கும் என்ன வித்தியாசமடா ,
மீனவரென்று சொல்லுதடா அரசுகள் ,
தன்னை வீனென ஒப்புக் கொள்ள மறுக்குதடா .
Comments