' அழகு'

குழந்தை முகமழகு
மழலை மொழி அழகு
மலரின் மணம் அழகு
மழையின் பிரிவழகு
பனியின் குளிர் அழகு
குளிரில் கதிரழகு
கதிரில் நிழழகு
நிழலில் நீ அழகு
நிலத்தில் வயலழகு
நீரில் கடலழகு
காட்டில் மரமழகு
வானில் வளி அழகு
உழைக்கும் மெய்யழகு
காதில் தோடழகு
மெய்யாய் கண்ணழகு
இமைக்குள் விழி அழகு
இமைக்கும் நொடியழகு
தலையில் மயிரழகு
மயிரில் மயிலழகு
மணக்கும் மன்னழகு
மங்கைக்கு முன்னழகு
காதல் மொழியழகு
மொழியில் தமிழழகு
தமிழில் ழகரழகு
நூலில் உடை அழகு
பின்னல் ஜடை அழகு
ஜதியில் நடனழகு
ஒலிக்கும் உதடலகு
ஒளிக்கும் விளக்கழகு
துடிக்கும் இதயழகு
தாமரை இதழழகு
மௌனத் தவமழகு
கொல்லாப் பகையழகு
குற்றமற்ற குடியழகு
அதை தாண்டிய பேரழகு
அனாதைக்கு உறவழகு
அழியாத கலை அழகு
அதற்கான விலை அழகு

இத்தனையும் தான் உலகு

Comments

அருமை அண்ணா.... கவிப்பேரரசு பட்டம் இனி உமக்கும்

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை