' கிழக்கை தேடி '
பறந்த நிலப்பரப்பினிலே
நீர் கொஞ்சம் கூட்டி
மண் சுழலச் செய்திடவே
மாடுகளை ஓட்டி
விரிந்து வளர விளை நிலத்தில்
விதைகளை ஊட்டி
வளர்த்து வைத்த பாட்டனுக்கு
ஏமாற்றம் ஊட்டி
வசதிக்காய் நிலத்தை
விற்பார் விலை கூட்டி.
தட்டிப் பரிப்போர்கள் - பலரை
நாளும் உதைத்தார்கள் எட்டி
விலை மதிப்பிலே உயர்ந்தது
நகை தங்கக் கட்டி - நகைக்குமே
கல்வி முன் தானுங் கைகொட்டி.
மனக் கோலம் காண்பதெல்லாம்
கால்களிலே மெட்டி
இரவு காணும் கதவின் காட்சி
உள் தாளை பூட்டி
வருடத்துள் வரவு காண்பார்
மழலை மொழி காட்டி
பிரிவு காணும் பிரியர்களுக்கு
யார் தான் வழிகாட்டி
இருளான உலக இடர் கதிராக ஒளிர
மதி தரும் சுகம் இக் கதிர் தர தவற
ஓடி ஒளிரும் கதிரவனுக்கு நான்
கட்டளையிடுவேன் கிழக்கை தேடி.
தீக்குச்சியின் மரணம் மருந்தால் அமைய
ஒளியிலிருந்தும் பிம்பம் இருளில் உறைய
விடியா வாழ்வில் விடியலுக்கு
விழியாய் வெளிச்சம் இங்கெதற்கென்று
Comments