' அப்பா '
ஆனாக பிறந்து
தானாக வளர்ந்து
அறிவாகி விரிந்து
அவளை தான் அடைந்து
பொருளுக்காய் அலைந்து
பிள்ளைக்காய் உழைத்து
பெற்றோருக்கு மகனாகவும்
குடும்பமே அவனாகவும்
வாழும் தெய்வம் தந்தை.
தாயை மதிக்க கற்று தருவார்
சமமாய் பழகக் கற்று தருவார்
கை கொடுத்து உதவக் கற்று தருவார்
கால் கடுக்க உழைக்க கற்று தருவார்
தடையின் பிடியில் ஊக்கம் தருவார்
கண்ணீர் சூழ்ந்த கடலிலும் நீந்தக் கற்று தருவார்
எல்லோருக்கும் எல்லாம் தருவார்
தன் வாழ்வையும் மற்றோருக்காய் விட்டு தருவார்
அப்பா.
Comments