மனிதம் ம(மு)டிந்தது

பிணத்தின் இடச்சுடு காடது
தவிக்குது மனித மனத்தின்
பேரிடர் பாட்டினால். 

மனம் மருந்தை தேடியோடுது
மதி மறந்தே மனிதமும் சிதைந்து
சின்னா பின்னமாகுது. 

சாவை தேடி திரியும் உயிர்
சவச்சடல ஆறடி படுகுழியினிலும்
இடராய் மலர்ந்தது சுயநல மென்னும் பயிர். 

தொட்டே தானும் கெட்டுவிட்டான்
மனிதமற்ற மனிதர்களுக்கும்
மருந்தால்  மாற்றுயிர் தந்துவிட்டான். 

கை விட்டனர் அவர் 
தந்த உயிர் கொண்டு
கை கொடுத்தவன் கதியிது என்றிட
இனி வரும் வரலாற்றிலும் இடமுண்டு. 

மழைக்காகவே மேகம் காரிருளடைகிறது
அத்தனை கரியம் எழுவதுகண்டு
மனதின் பாதை மரணவாயிலை தொடுகிறது. 

Comments

Unknown said…
மருத்துவம் தந்ததந்து பல உயிர் காத்த ஓர் உயிர் பிரிந்த மருத்துவரின் உடலுக்கே இந்த ஊரில் இடம் இல்லை என்றோர்
என்ன மதிப்பு தான் தருவாரோ இந்த மானுட பிறவிக்கு.




தங்களின் கவிதை அருமை அண்ணா
நன்றி தங்கள் பெயர்
Unknown said…
Arputhamana padaipu manidham illadha manidhanin . Marana olam. Manidham thottadhu. Vazhthikal

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை