பெண்மை
பெண்ணென்பவள்
நல்லவனால் சிலையாவாள்
தீயவனால் கொலையாவாள்
வயிற்றுக்குள் கற்பாவாள்
சிந்தையினில் கனவாவாள்.
உடலுக்கு உயிராவாள்
இதயத்தின் துடிப்பாவாள்
இமைக்குள்ளே விழியாவாள்
இதழோரச் சிரிப்பாவாள்.
நாணத்தால் நெளிந்திடுவாள்
காதலாகி குழைந்திடுவாள்
கணவனின் பொற் காலமிவள்
களங்களில் அவன் வீரமிவள்.
பொன்னைவிட உயர்வானவள்
பேறினில் பெண்ணானவள்
இன்பந் தரும் ஆழியிவள்
பழகிட நற் தோழியிவள்.
Comments