ஈசா
சாந்தமாகி சாம்பலாகி
பித்தனுக்குள் சித்தனாகி
சிரசணிந்த கங்கை நீரும்
பாவம் போக்கி வைக்குமே.
கழுத்தை சுற்றும் நாகமுண்டு
கண்களங்கு மூன்று உண்டு
கைகளிலே உடுக்கை கொண்டு
சூலம் கண்டு கொள்ளவே சூழ்ச்சி நீங்கி போகுமே.
பெருங்கடலாம் இப்பிறவி
அகத்தியரை தந்துதவி
அகமகிழும் தமிழும் தந்து
இச் சகத்தில் ஆள வைத்தவா.
சங்கரனே வேதமாகி
சங்கரிக்கு நாதனாகி
ஐங்கரனின் தந்தையாகி
விந்தையான சிவனே
எந்தன் சிந்தையாகிறாய்.
ஆறு முகனின் சீடனாகி
தில்லை யம்பல நடராஜனாகி
ராவண சிவதாண்டவத்தை
லயித்த லங்கேசனாகி நின்றவா.
நாதியற்று நாங்கள் தேடும்
நாதனாகி நின்ற நீரே
அர்தனாரி பிறப்பெடுத்த
ஆதியந்த மற்றவா.
விந்தையான உலகில் எந்தன்
தந்தை என்று சொல்லுமுன்பு
தந்தைக்கும் தந்தையான
உன்னை எண்ண மறக்கவில்லையே.
Comments