முட்டாப் பயலே முதலாளி
விலங்குகள் கூட விளங்கிக் கொள்கின்றன !
தன் வாரிசுகளின் வாழ்வினை .
பணி செய்திட பட்டம் பெற்றாலும்,
கூலிக்குப் பணியாள் பணியும் அவலமுன்னே .
விளங்கா மக்கள், விலங்கினை
மாக்கள் என்றே விளிப்பார்கள் .
விளங்காதோரே, விலங்கானதனால்
தனதொத்த அடுத்தத் தலைமுறையை,
பசியிலிருந்தும் காப்பாற்றும்,
பசித்தால் மட்டும், புசிக்க
வேட்டைத் தொழிலை கற்பித் ததைத்தேற்றும்.
ஆனால், தான் மக்களிளென்று மார்தட்டும்
சில மதியற்ற மனிதர்களே,
முதலாளி எனும் மிதப்பினிலே
தொழிலாளிகளை மிதிப்பது ஏன்.
அவனுச்ச உழைப்பின் கூடுதல்கள்
உங்கள் சட்டைப் பையில் தங்கி
கொடுக்கும் கையைப் பூட்டி வைப்பது ஏன்
அது என்றுமுங்கள் நலனையே உயர்த்துவதேன்.
பற்றால் வற்றிப் போகிறான்
அதிலே அதிக பயன் பெறும்
முதலாளியவன் முற்றும் பெற்றுத் திரிகிறான்
தொழிலாளியை மட்டும் தெருவில் விடுகிறான்.
Comments