சாக்கடையே
மயிருக்கு செருப்பென இருக்கும்
மண்டைக்குள் மத மெதற்கு?
உயிருக்கே கேடாய் இருக்கும்
மதத்திற்கொரு இறையெதற்கு?
மானம் காத்திட உடையணிவாய்
அதை இழிந்தால் உடையிருந்தும்
மானமற்று தான் திரிவாய்
எழில் வர்ணத்தில்
எல்லாம் வல்லவனை வைக்காதீர்
எண்ணத்தில் இல்லா இறைவனை
எங்கு நோக்கிலும் இடராய் தினிக்காதீர்.
மதமது மதமென மாறிவிட்டால் மதியதை மதமது மிதித்துவிடும்
விதியது உள்ள வாழ்க்கையிலே
வினையது வலியது முடிவின் கதியதுவாகிவிடும்.
புத்தகம் புரட்டும் கைகளுக்கும்
கரும்பலகை நோக்கும் கண்களுக்கும்
நற்கருத்தை கேட்கும் செவிகளுக்கும்
நாளும் களிக்கும் நட்பிற்கும்
சாதியு மதமும் சாக்கடையே.
இஸ்லாமேசிந்து ( இஸ்லாம் ஏசு இந்து ) என்று
எல்லோரும் பிரிந்துள்ளோம்
எஞ்ஞான்றும் மனிதரென்று
யாரேனும் தானுளரோ
மனிதராக முடியாதார்
பிறந்தென்ன இறந்தென்ன.
Comments