செம்மொழித் தமிழ்
ஓசைக்கு வடிவாகி உயிருக்குள் உறவாடும்,
வார்த்தைக்கு வயதறிய முடியாமல் தடுமாறும்,
வளம் பெற்று என்னில் வகுக்கவியலா,
எண்ணத்து ஊற்று எங்கும் பரவிருக்கும்.
கலைகளின் உடல் மொழிக்கும்,
கலைஞனின் வாய் மொழிக்கும்,
வள்ளுநர் வகுத்த அமைப்பை
ஒத்த இலக்கிய வரலாறுகளிங் கிருக்கும்.
மரித்து போகும் மனித இனத்தில் ,
மலர்ந்து கொண்டே மருவி வாழும்,
மரபில் மாற்ற மேதுமின்றி,
தாய்மை உணர்வில் தரம் காணும்.
காலம் போல தனித் தியங்கும்,
தன்னை தாய் மொழியாகக் கொண்டோரை,
தன் வளத்தால் அவ்வினத்தை இயக்கிவிடும்,
கலப்பின்றி களம் கண்டு
காலத்தில் வென்று விடும்.
பாட மறியாதவர்க்கு
பட்டறிவு தரும் பாடம்,
பல மொழிகள் இருக்கையிலே,
வழி நடத்தும் புது மொழியாகி,
எதிர்கால தலைமுறைக்கு
எடுத்துரைக்கு மன்றைய பழமொழியாகும்
நடுநிலைமை தன்மை யுண்டு ,
கலையோடு இணைந்து
காலப் பெட்டகத்தில்
சுவடு மாறா சுவையோடு,
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுவதை ,
வின்னும் மண்ணும் வியந்து பார்க்கும்,
விஞ்ஞானம் சிறந்து ,
இத்தனை சிறப்புடன் செழித்திருக்கும்,
தமிழுக்கு தரணியில் தனிப்புகழுண்டு
செம்மொழி என்னும் சிறப்புண்டு.
Comments