என்னவென்று சொல்வதென்னை
எத்தனையோ ஆசைகள்
சித்தத்தில் உதிக்கிறது
எண்ணாமல் இருக்கத் தான்
என் மனமும் நினைக்கிறது
என்ன செய்வதென
தெரியாமல் தவிக்கிறது
ஏதேதோ ஆசைகள்
இம்சைகள் செய்கிறது
கண்மூடி
என்னை நான் காணுகையில்
நான் என்பவன்
நீண்டு நெடுகிடையாகிய குப்பை
உயிர் பூதங்கள் இருப்பதால்
நான் மனிதப் பொறிகளின் தொகை
இதே உணர்வோடு வாழ நினைக்கிற பித்தன்
சில நொடிகளில் வாழ்ந்து பார்த்திடும் சித்தன்
நான் அந்த பரமன் வாழ்த்திய பக்தன்
இப்பிறப்பில் அவன் பாதம் பணிந்திடில் முக்தன்.
Comments