சாதி...
சாதிக்கும் வரை வாழ்பவரும்
சாதிக்காய் வாழ்பவரும்
சங்கமிக்கும் இச்சமூகத்தில்
தலைமுறையின் தலைவிதியை
திருத்த எவரும் தேவையில்லை
சாதிக்கும் நெறி உண்டு
சாதனைக்கும் நெறி உண்டு .
நெறி என்னும் பொதுவுடைமை
தன்னுடைமையில் பொருத்தி
பிறழாமல் வாழ்தலே
பேரின்ப மென்றுணர்ந்திடில்
சாதனை சரித்திரமாகிடலாம்
நடைமுறையில் நல்லொழுக்கம்
நாம் கடைபிடித்தே
அடையாளம் சாதியெனும்
அகந்தையதை மனதில்
அடியோடு அழிப்போம்
தரமாக வாழ்ந்து
சமமான சமூகத்தில்
சண்டைகளை தவிர்த்து
சாதனைகள் படைப்போம்.
Comments