இதழி

ஏன் என் கண்களில் உயிர் உணர்ந்தேன் 
நீ என் கண்களில் கனவானதனால்
உன் விடியலுக்கு என் இருள் உதவிடட்டும்
நம் காதல் இரவுகளின் இனிமையினை 
விண்மீனொளிகள் பறைசாற்ற
முகச்சதை பசிக்கு அமுதூட்ட
வியர்க்காத இதழ்களால் பசியாற்றி
முத்தத்தில் ஒத்தடம் தந்தவளின்
மூச்சுக் காற்றை பெற்றவுடன் 
உணர்வுகள் புத்துயிர் பெறுதடி காதலென
உன் தாங்கு அங்கத்தில்
நான் இதழுணர்வாய்த் தந்ததெல்லாம்
என் கனவில் தொங்குதடி
உன் கணைக்கால் கொண்டிருந்த 
நானெனும் கொலுசு
நான் தந்ததாகி
நாம் ஆன போது
பிடியாய் நீயும் களிறாய் நானும்
விதியின் விளையாட்டு திடிலில்
அன்பு
கோபம் 
மௌனம் 
சகிப்பு
எல்லாம் கடந்து நல்லா இருப்போம்
எல்லாம் வல்ல பெற்றோரின் 
பெருங்கருணையினால்
காலம் முழுதும் களித்து மகிழ்வோம்
உலகம் அனைத்தும் சுற்றித் திரிவோம்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

இதயத்துடிப்பு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

விடுதலை பறவை

நினைவில் நின்றவள்