Posts

Showing posts from February, 2018

' சிரிய பயங்கரவாதம் '

பாம் போட்டு தாக்குது பயங்கரவாதம் ஆக்குது பயமுமங்கு எல்லோருக்கும் யூனிஃபார்மு ஆனது அநியாயமும் அங்கங்க ஃபுல் ஃபார்ம்ல நிக்குது . ஊரே சேர்ந்து கூவுது உசுரும் செத்து போகுது நாடு நாசமாகுது நாயி நாதாரித்தனம் பன்னுது . இது உலகமில்ல நரகம் இங்க நடக்கும் கொடுமை எல்லாம்  அந்த கடவுள் செய்யுற கலகம் அவதி பட்ட சிரிய இணம்  காலமெல்லாம் அழுதுகிட்டு இருக்கும்  .

' வளமான வாழ்வு '

தனி மனிதனை , தடம் பதித்திட ,  வழி நடத்திடும் ,  விதி யாரறிவார் . வரும் தடைகளை ,  தரும் வலிகளை ,  பெரும் வரமென ,  இங்கு யாருணர்வார் .    செய்யும் முயற்சிகள் ,  முறை பயிற்சிகள் ,  தரும் புரட்சியை விதைத்திட யவர்வருவார் . கை விரல் மை ,  நம் உரிமை ,  தரும் தலைமை ,  எனும் நிலமையிலே ,  பெரும் கொடுமை ,  தடுத்திட யவர் பிறப்பார் . மான்புறும் மனைவி ,  மனவாளன் துணைவி ,  மக்கட்கு இறைவி ,  என குடும்பம் மேவிடுவார் . தள்ளாத வயதில் ,  கிடைக்காத உறவை , மரணத்தின் பிடியிலும் ,  எண்ணாது வாழ பழகிடுவார்.  

' பணக்கார பிச்சைக்காரர்களே '

இல்லாத செல்வமும்  , பொல்லாத வறுமையும்  , தாலாட்டுக் குழந்தையும்  , தள்ளாடும் கிழவரும்  , கையேந்தி வீதியில்  , நாதியற்று நாளையில்,  பணத்தாசையால் பிணமாகும் மனமே . கை கண் கால் இல்லாது  , குழந்தை முன் செல்லாது  , தாய் தந்தையென சொல்லாதோர்  , தேடும் பாவம் அன்பிடமே  , அது பிச்சை எடுத்தாலும் அழியாதே  . திரானியற்று திமிருடன் திரியும்  , தலைகண தருக்கர்களும்  , தலைவிதி தலைகுனிவு கண்டாலும்,  ஒப்பிட பிராணிக்கும் இணையாகாதோரே . பகட்டுடனே பறக்கும்  , பணக்காரர் களுக்கும்  , பட்டறிவு பிறக்கும் , பாடம் சொல்லி கொடுக்கும் .

' இல்லாமையும் கல்லாமையும் கற்றுத்தரும் பாடம் '

பிறப்பெடுத்த வாழ்வில்  , சிறக்க தேவையில்லை , ஏளனமாய் சிரிக்கும் நிலை , வர வலியாய் வரும் கவலை . வசதியற்று வாழ்வை தொலைத்து , வளமுடன் வாழ்பவரை பார்த்து  , வலி கொண்டு மனம் வலம் வரும்  , வாழ வழி தேடி களவு செய்ய களவுரும் . சாதி சலுகைத்தரும் அரசியல்  , அழுகுரலுக் காறுதல் தருவதில்லை  , பல பகட்டுப் பரதேசிகளால்  , பலரின் கல்விக் கேள்விக் குறியாகுதே ? திமிரைக் காட்டும் சமூத்திடம்  , திணறும் வார்க்கமாகிடவே  , திருடும் மக்கள் கூட்டத்திடம்  , திரிந்து பொருள் சேர்க்கும் குணம்  , திருட்டைத் தொழிலாய் செய்து தினம் .

' மறு மணம் புனித திருமணம் '

மனம் படும் பாடு , இரு இதயத்தின் வீடு  , குடும்பமெனும் கூடு  , சிதைந்தால் சுடுகாடு . கை பிடித்த கணவன்  , கை விட்டு காற்றோடு கலக்க  , கைமை அடைந்தவள்  , சடங்குகளால் காலத்துடன் சதுராடுகிறாள் . தன் வாழ்கைகும்  , தன்  பிள்ளைக்கும்  , வாழ்வும் வரம் தருகிறதே  , தீர்வாய் மறுமணம் அமைகிறதே .

' இயற்கையின் இழப்பு '

தவமாய் பெண்மை  , தவழும் பிள்ளை  , நீண்ட வானம்  , நில்லா நேரம்  , கரை வரும் அலை  , கடவுள் சிலை  , தடவும் தென்றல் , தருகிற மரங்கள்  , விடைபெறும் பகலில்  , விடியும் இரவு  , இரவின் மடியில் உறங்கும் நிலவு  , பகலில் படரும் பகலவன் அழகு  , உயர்மா மலைகளில்  , உயிர்த்தெழும் காடு  , அழுகிற மேகம்  , வழிகிற அருவி  , பறவைகள் பாடல்  , இசைத்திட கருவி  , மணங் கொண்ட மலர்கள்  , வானவில் நிறங்கள்  , தாயின் கருவில் அழகிய பிறப்பு  , மண்ணுக்கு எருவாய் அழகிய இறப்பு  , இயற்கைக்குள் அடங்கிய இத்தனை  சிறப்பு  , செயற்கைகுள் புகுந்து கண்டது இறப்பு .

' யார் துணை '

சின்னஞ்சிறு பிள்ளைகளை  பள்ளி விட்டு செல்வார் , இளம் வயதில் மணமுடித்து  கட்டில் காணச் சொல்வார் , உடனிருந்து குழிபறித்து , உழைப்பை உறிஞ்சி கொள்வார் . மாண்டுவிட்ட போது உடலை , மண்ணில் புதைத்து விடுவார் . யாருக்கு யார் துணையென , யாரிங்கு சொல்வார் . ஊருக்கு உறுதுணையாய் , பலர் வாழ்ந்து செல்ல , பேருக்கு நான் துணையென , சிலர் வந்து சொல்வார் . நூறுக்கு உரிமைகளை  தாரை வார்த்து செல்வார் .

' பன்முகம் கொண்ட பால்வினை '

தீராத நோயும் , தரும் ஆராத காயம்  , இல்லா வானில்  , மேகமென நில்லாது ஓடும் . கொள்ளாத உடலுறவால்  , உயிரைக் கொல்லாமல் கொல்லும்  , விரல் தொடுதலில்  ,  மூச்சு விடுதலில்  , நோய் பறவாமலிருக்கும்  , முறையில்லா உடலுறவுகள்  , உயர் முடிவுகள் தந்து செல்லும்  , உயிரினை பரித்துக் கொள்ளு(ல்லு)ம் . பால்வினை நோய்  , பல விதங்களில் தொற்றும்  , பெற்றோரின் சந்தேகக் கண்ணில்  , தென்படுவதோ குற்றம் , இதனால் பல உயிர்கள்  , ஆதரவற்று தான் சுற்றும்  .