காற்றின் ஊற்று
மனதை மெல்ல வருடும் காற்று மனதிற்குள் காதல் ஊற்று கானம் கூட காற்றின் காலடியில் பணிந்து வந்து மரங்களின் இசை கேட்கும். வேரிலே நீரை எடுத்து கை போல கிளைகள் விரித்து காய் கனிகளை தானும் அளித்து சுவாசமாகி நமக்கும் வாழ்வளிக்கும். மின்னல்கள் கண் சிமிட்ட இடி இங்கு தாளம் தட்ட மழை தூறல் ஆட்டம் போட காற்றோடு காதல் கொண்டாட்டம். நகருமந்த மேகம் அது வான் வெளியின் தேகம் தென்றலுடைய வேகம் எனக்கு இயற்கையின் மேல் மோகம்.