ஆயுள் திருடி
காதல் சித்திரவதையில்
காலம் முழுதும் நானும் வாழ
ஆயுள் கைதியாகிறேன்
அவளின் இதயத்துடிப்பில்
இதயம் வெடிக்கும் கணத்தில்
உன்னை நினைத்து தவிக்கும் உயிராய்
எங்கும் நிறைந்த நினைவில்
எல்லாம் ஆன உன்னை
என்று நான் வந்தடைவேனோ
என்னவளாய் இருப்பவளே
எனக்காய் ஒரு வரம் கொடுப்பாய்
ஏக்கத்தை ஏற்படுத்த
அன்பினால் தாக்கம் செய்தவளே
அத்தனைக்கும் அப்பாலான
இந்த ஆண்பாலின் ஆதாரமே
சித்தனுக்குள் ஏற்பட்ட பித்தம் போலே
நித்தம் நித்தம் கொல்லும்
உந்தன் அழகை என்ன சொல்ல
என் ஆயுள் திருடிய தேவதையே
Comments