வளைகாப்பு
மூன்று திங்கள் அன்புக்குள்ளே
பத்து திங்கள் முத்து அதை
பத்திரமாய் பெற்றெடுக்க
காத்திருப்போர் காலத்துக்கு
எதிர்பார்திருப்போர் ஏக்கத்துக்கு
கருவறைக்குள் கவலை தீர்க்கும்
கடவுள் தனை தாங்கும் அன்னைக்கென
எழுபிறப்பில் அவள் பெரும்
ஏழாம் மாத ஏகாந்தமாய்
கை நிறைய வளையல் பூட்டி
குதூகல கூத்தாடும்
குல மகளின் உள நெகிழ்வை
குறிக்கும் இருமன இணைவில்
உதிக்கும் உயிர் வயிற்றுக்குள்
துடிக்கும் பெரும் சுகத்தோடு
உதைக்கும் அசைவுகளுள்
அன்னைக்குள்ளே அண்டம் கொண்ட
அழகு குழந்தை தெய்வம் எனில்
அன்னையவள் அதற்கும் ஓர் படி மேலல்லோ
Comments