மாளிகை
மாளிகையில் இருக்குறதாருட
நீயும் ஒரு நாள் வாழ்த்துப் பாரடா
பணம் இருக்குறவன் படுகிற பாட்டை
பார்கிற விழிகளோ கணக்குப் போடும் நாட்டை
அவனுக்கென்ன குறைச்சலென்று
உரைக்கும் மொழிகள் அறியாது
இறக்கும் வரையில் இருக்கும் உயிரென
உணர்வும் எண்ணத் துணியாது
செல்வம் கொட்டிக் கிடக்குது என்று
வெட்டிக் கதைகள் பேசிடுவார்
மூளையை முதலீ டாக்கிய மனிதனை
யார் தான் இங்கே போற்றிடுவார்
ஏழ்மையில் வாழ்ந்து எளிய முறையில சேமிச்சு
தலைமுறைகள் தலைநிமிரும் நேரம் வரை
தானும் அடக்கி தான் வாசிச்சு
ஆதாரக்கல்வி அறிவால உழைப்பின் மூலாதாரத்த
உலக மக்களுடன் முட்டிமோதி
உயர் இடத்தை பிடிக்க தானும் போராடி
மேலேறி வந்தவுடன் வளருகிற செருக்ககற்றி
மனிதத்துடன் வாழ்ந்தாலே மாபெரும் சாதனையே
மாளிகை என்பது மனிதர்க்கு
கடனில்லா வாழ்க்கையில் கட்டாந்தரை சுகத்தோடு
ஒழுகாத கொட்டாக்குள் ஒழுக்கமாய் வாழ்வதுடன்
வாடகை வீடானாலும் வறுமையும் கடனும் நோயும் இன்றி
வாழ்வோரெல்லாம் மாளிகையில் வசிப்பவரே
Comments