எட்டுக்குடி குமரா
எட்டுக்குடிக்குள்ள இருந்து என்னை கட்டிஇழுப்பவனே
தொட்டு அனைத்திடும் அன்னை சுகம் தன்னை நீயும் தருபவனே
மொட்டை தலையிணை கொட்டித் தொட்டு விடும் மழைத்துளி போலே
உன்னருளாய் நான் உணர்வேன்
நான் தொடுமுன் திருவடியாலே
விட்டு பிரிந்திடும் கெட்ட உலகிதில் விட்டுப் பிடிப்பவனே
என்னைக் கட்டிப்பிடிப்பவனே
உயிரைக் தொட்டுப் பிடிப்பவனே
பட்டு சாத்தி உன்னை பச்சக்கொழந்தையாய் பார்க்க நினைக்கிறேன்
உன் அப்பன் சிவன் உன்னை
அரசனாக்கி அழகு பார்க்கிறனே
காத்துல பறக்கும் தூசியும் கூட
திருநீ..று வாசமாகுதே
காலு கழுவுற தண்ணீருல மீனும்
கால கடிக்கிறதே
எந்தன் பாவம் அழிக்கிறதே
Comments