பயனற்ற பயண்பாடு
தொழிலுக் குதவா கல்வி
ஆயிரமிருந் தென்ன பயன்
கல்லா முன்னோர் கலையிங்கு
வரலாறாய் நிலைப்பதி லென்ன பயன்.
எழில்மிகு இயற்கை அழகெல்லாம்
எழுந்து நிற்கும் கட்டிடமா
செடிமர கொடி தரும் கொடையிங்கு
நாம் மறந்த மகத்துவ மருத்துவமா!
உற்றார் உறவின ரோடு
ஊரே கொண்டாடிடும் பண்டிகைகள்
காணக் கிடைக்கா நிலைகண்டு
ஏங்கித் தவிக்கும் கண்மணிகள்.
உடல் இரத்த கண் தானங்செய்ய
உறுப்புகள் நல்லா விளங்கிடனும்
உறுப்பை சுறு சுறுப்பாக வைத்திடவே - மைதானம்
சென்று பயிற்சிகள் செய்திடுவோம்
தாகம் தீர்த்திடும் ஆறு - தான்
ஓடி கடல்நீர் ஆகும் முன்னே
மாயும் உயிர் பலநூறு - குடுவைக்குள்
அடைத்து விலையாகும் முன்னே.
Comments