நாளைய சமூகம்
தற்கொலைகள் தடுக்க
மாடியில்லா கட்டிடம்
மறைவில்லா வகுப்பறை
வலையமற்ற மேற்கூறை
வகுப்பறையை சுற்றி சுற்றி
பெற்றோர்க்கு வசிப்பிடம்
தன்னம்பிக்கை வளர்க்க
இறைவனை மட்டும் நம்பிவிடு
பாடம் மட்டும் பயனில்லை
பயன் படுத்தும்
அறிவை அறிந்துப் பாடமெடு
ஆண்டவன் வரலாற்றையும் அகற்றிவிடு
அரசியலால் ஆண்டவனின் வரலாற்றையும் அழித்துவிடு.
அவசியமானது அறிவு அதை அறிந்திட தானிந்த படிப்பு
முன்னுரிமை பெறவே தேர்ச்சி அது
முட்டாள் என்பதற்காகாது சாட்சி
காலத்தில் இந்நிலையில்
குழந்தையை தன்னிடத்தில் பொறுப்பாய் பார்த்து கொள்ளாதார்
பெற்றோர் என்பதற்கே பொருள் சேர்க்காதார்.
நானுட்பட எல்லோரும் நல்லோராகி
நற்சமூகத்தை உருவாக்கிடுவோம்
Comments