சேவற் கொடியோன்

கந்த கடவுளை 
சொந்த கடவுளென
நிந்தை தவிர்த்து 
சிந்தை செய் மனமே

கந்த கடவுளே காணும் காட்சியது 
நிந்தன் பேரருளே
வாழும் வாழ்க்கை அது 
வெற்றி வேலவனின் வாரிசாவதுவே

ஆறு முகத்திலும் 
நாவி லுதிர்த்திடும்
நல்ல தமிழ் மொழியே
அதனைக் கொண்டே
நாளும் உன்னை 
நானும் வணங்கிட
வேண்டும் 
உயிரின் ஒளி வழியே

அன்னை பார்வதி 
தன்னை உனக்கென 
வேலாய் தந்திட்டாள்
அண்ணன் உனக்கென
உலகம் ஏற்பட 
பழத்தால் பலம் தந்தான்
அப்பன் சிவனுமுன்
சீடனாகி உன்னை 
ஆண்டவன் ஆக்கிவிட்டான்

சூரபத்மனை
போரில் வெல்ல பல 
தீரம் புரிந்தவன் நீ 
தேவர் குலம் செழிக்க
மூவர் உலகுக்கும் 
முதன்மை ஆனவன் நீ

தேடி வந்தவரின் 
தேவை தீர்த்து வைக்கும் 
தெய்வமானவன் நீ
காதல் மனைவியுடன் 
இந்திரன் மகள்
சுந்தர தெய்வானையோடு
இத்தேசம் ஆள்பவன் நீ

அருணை மலை நாதன் 
அண்ணாமலை அவன் 
அருணகிரிநாதனாய் 
உன் புகழ் பாடினானோ
பாடல் கேட்டு 
மயில் மீதமர்ந்து 
அருளாசி தந்த எங்கள் 
சேவற் கொடியோனே.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே