Posts

Showing posts from January, 2018

' படைப்புக்கு தோல்வியில்லை '

உன்னால் முடிந்ததிங்கு , யவராலும் முடியா தது  , நேரங்காலம் பார்க்கும் நொடிகள்  , மீண்டும் திரும்பா தது . ஒப்பீடுப் போட்டியில்  , எல்லோரும் சேரலாம்  , படைப்புகளின் உரிமையை  , படைப்பவனாய் ஆளலாம் . படைப்புகள் பல பிறக்கலாம்  , புதுப் பாதை உருவாகலாம்  , நாமென்றும் நாமாகலாம்  நற் படைப்பு ஒன்றினால்  , நாளை இத்தரனியல்  நீயும் உலகாளலாம் .

' மனம் ஓர் குப்பை தொட்டி '

இனிக்கிற வாழ்க்கையில் , இழக்குற நிம்மதி , இருக்குற குப்பைக்கு , இடமென மனம் இருப்பதனால் . பாசம் படர்ந்த மனதில் , வேசமிட தூண்டும் பொழுதில்  , பேராசை என்கிற  பேயும்  , ஆடம் பரமெனும் நோயும் , பொய்மை எனும் அதன் தாயும் , சிற்றின்பம் தருகிற காயம் , எல்லாம் மனதில் சீறிப்பாயும் , நிம்மதி கெடுக்கும் காலன் ஆகும் , மனதைக் குப்பை தொட்டியாக்கும் , வாழ்வும் இதனால் நொடிக்கும் , நம்மை ஏளனச் சிரிப்பால் சிதைக்கும்  .

' விழிப்போம்

கட்சிக் கறை வேட்டி கட்டி , காசு நோட்டக் கண்ணில் காட்டி , ஓட்டுக்காக கூட்டம் கூட்டி , ஓடஓட துரத்தி விரட்டி , ஒடுக்க நெனச்சா மித்கிகனும் எட்டி. சதி காரக் கூட்டம் கூட்டி , அதி காரத் திமிரில் மிரட்டி , மதி கொண்ட மக்கள் போராட, விதியாய் விதித்தது வியாதியடா , வியாதியே அரசியல் வாதியடா .

' நட்பின் நயம் '

பாசத்துல  , பெத்தவள மிஞ்ச இங்க மத்தவங்க யாருமில்ல , ஒத்துகுட வேனும்புள்ள , நட்பு  நாலு படி மேல புள்ள . எங்க நட்பு வானம் போல ,                   இரவு பகல் நாளுக்குள்ள , வண்ணத்துப் பூச்சிப் போல  , வாழுறோமே ஊருக்குள்ள . எல்லாரும் தூரத்துல , ஏதோ ஒரு வேலையில - இருந்தாலும் போனுலதான் பேசிக்குவோம்  , நெனக்கிர நேரத்துல . என்னக்கிடா பாப்போமுன்னு , ஏக்கத்துல காத்திருப்போம் , ஏதோ ஒரு டீக் கடையில் , நட்புனால பூத்திருப்போம்  .

' "தண்ணீரா " "கண்ணீரா" '

ஆறு லிட்டர் ரத்தத் தண்ணீர்  மனிதனை ஆட்டிப் படைக்குது  , கலைத்துப் போன உடலும் இங்கு  கால் லிட்டர் தண்ணீர் கேக்குது ஆறுகள் பாய்ந்து ஓடிய பூமி  , காடுகளாக கிடக்குது  , குடினீருன்னு குடுவைக்குள் விற்க்கும்  , கொடுமைகள் இங்க தான் நடக்குது  , கண்முன் காணா ஆண்டவனுக்கு  , அபிசேகங்கள் நடக்குது  , நாற்காலிக்கு ஆசைப்பட்டு  ஓட்டை வாங்கும் கூட்டம் இங்கே ரோட்டில் விட்டுப் போகுது தண்ணீருக்குக் கண்ணீர் விடும் - பல குழந்தையின் உயிர்களும் துடிக்குது  , ஒவ்வொரு காரும் லச்சம் லிட்டர்  , தண்ணீருல தான் குளிக்குது  , பாவம் பாக்குற - மக்கள்  கூட்ட மெல்லாம்  கண்ணீரைத் தான் வடிக்குது  .

' இசை தரும் விசை '

ஏற்றத் தாழ்வுள்ள பாதை  , மனதை அடிமையாக்கும் போதை  , நாபியில் பிறக்கும் கீதம்  , நல்லிசை தருகிற நாதம்  , கானமாகும் ஓசை  , மனபாரம் குறைக்கும் இசையின் மீது ஆசை  , குயில்கள் பாடும் ஓசை  , மயக்கும் இசையின் பாஷை  , ஏழு ஸ்வரமே இருக்கும்  , இசை ஏழேழு ஜன்மமும் தழைக்கும்  , குரல் கை கொடுக்கும் வரை  , மொழிகள் இறக்கும் வரை  , இசை தழைக்கும் .

' ஓவியம் ஓர் காவியம் '

எண்ணங்களின் உருவம்  , பல வண்ணங்களின் வாழ்க்கை  , கற்பனையின் பிரசவம்  , வெற்று காகிதத்தின்  இதயம் . எழுத்துகளின் பிறப்பிடம்  , கருத்துகளின் போர்க்களம்  , குரலற்றவன் ஆயுதம்  , சுவற்றில் வெறும் சித்திரம் . உருவகத்தின் உறைவிடம்  , திரைப்படத்தின் வசிப்பிடம்  , வரை கோடுகள்  வடிவம் தரும் , அது ஓவியமென்றாகிடும் .

' தேடலே தீர்வு '

வாழ்வை படைத்தவன்  , வாழ நம்மை படைத்தான்  , வளர்ச்சி காண தேடல் கொடுத்தான்  , தேடல் ஒன்றில் வாழ்வைப் புதைத்தான்  , பிள்ளை பருவத்தில் கல்வியை தேடவைத்தான்  , இளமை அடைந்தபின் கலவியை தேடவைத்தான்  , மகிழ்வுடன் வாழ மூன்று   , முடிச்சுகள் போட வைத்தான்  , மனையாளை காக்க  , மாத ஊதியம் தேட வைத்தான்  , மூச்சுள்ள வரை வாழ அறுசுவைம்  , மூச்சு விட்டு செல்லும் நேரம் சேரும் உறவையும்  , காலம் முழுதும் குடும்பச் சுமை தாங்கும் பொறுப்பும்  , செல்வம் சேர்த்து சுகமாய் வாழ உருதுணை உழைப்பும்  , இத்தனையும் வந்தின்பம் தரும் , அத்தனையும் நல்ல தீர்வைத் தரும்  , இத்தனையும்  உடன் வரா போதில் வெற்றி வரும்  , தேடல் கொண்டு ஓடும் பொழுதில்  .

' கல்விச் சந்தை '

பிள்ளைகளின் மழலை  மொழி மாறவில்லை  , குழந்தைகள் கல்விக்காய்  கரு தரிப்பதில்லை  , கடன் வாங்க துடிக்கும் பெற்றோருக்குப் பஞ்சமிங்கு இல்லை  , கல்வியை தொழிலிருந்து  தடுக்க வழியுமில்லை  , தலைமுறை படிக்கா பாடத்தினை  , கல்விச் சுமையென தூக்கும்  , தலைவிதி கொண்ட - குழந்தையை விட பாவமிங்கு யாருமில்லை  குழந்தையின் வலிக் குரல்  யாருக்கும் கேட்கவில்லை  , பாசம் பகிர்ந்திட பெற்றோர்க்குத் தோன்றவில்லை  , பாசத்தை வெல்ல  பாடம் கற்றுத் தருவதில்லை , பாருக்குள் பிள்ளைகள் காணும் கொடுமைக்கிங்கு அளவே இல்லை .

' பரிதவிப்பில் பெண் பிறப்பு '

முப்பாலும் பசியென்றால் பாலருந்தும் தாயிடமே அத்தகைய சிறப்பை இங்கு கொண்டது பெண்பாலினமே அரும்பு மீசை வருவதை வளரிளம் பருவமது சொல்லுமே ஆசையென துளிர்வதும் காதலென மலருமே பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் அறிவியலென்றாகுமே பாலியலால் நாடுமிங்கு நாசமாகிப் போகுமே களிப்போடு  விளையாடும் குழந்தைக்கும் கலவி  மோகச் செயலினால் வலிகள் நேர்ந்திருக்குமே துடிதுடித்த வேளை கண்ணில் கண்ணீரும் வழிந்திருக்குமே காமுகனே ஆன்மை உனக்கின்பம் தரக்கூடுமே பெண் குழந்தைக் கனவை அது சிதைத்து சாகடிக்குமே நல்லவனா வருவேன்னு தாய் பால் தந்த அவளுக்கும்  உன்னைப் போன்ற தருதலையால் தலை குனிவு நேருமே சிற்றின்பத் துக்காக  சிறு பெண்ணுக்கிந்த கொடுமையா ஆயுளுக்கும் அவள் குடும்பம் வேதனையால் வாடுவது தேவையா காமத்தை தடுத்திட சுய இன்பமின்றி வேறு இங்கு ஏதையா காலமெல்லாம் கம்பி எண்ண வைக்கும் கலவி தேவையா மாரால பால் கொடுத்தா அவளுக்கது புள்ளதான் மானங்கெட்ட நாய்களால நம்ம நாட்டுக்கே தொல்ல தான் .

' சுயநலமெனும் சுடுகாடு '

அன்னை மொழி மறந்துப்புட்டு , ஆடம்பரம் தேடுறோம்  , ஆங்கிலேய மோகத்துக்கு  , அடி பணிஞ்சு ஆடுறோம்  , ஆடைகள கிழிச்சு விட்டு  , அரகொறயா திரியிறோம்  , மானங்காத்த ஆடை மறந்து  , மானமின்றி வாழுறோம்  , ஆழம் பாக்க கால விட்டு  , ஐந்நூறுக்கு ஆள விட்டோம்  , வாக்கு பிச்சை போட்டதுக்கு  , வாழ்க்கையவே தொலச்சிபுட்டோம்  , சோதியான இறைவனையும்  , சாதிக்குள்ள தினிக்கிறோம்  , சாதி இல்லனு சொல்லிகிட்டு  , சாதி சலுகை வாங்குறோம்  , ஊருக்காக வாழுறேன்னு  , வேசமிட்டு சுத்துறோம்  , காசு பணத்த சேத்தவுட்டு  , கட்டையில வேகுறோம்  , உடம்ப விட்டு உசுரு போக  , பிணமாக போகுறோம்  , சுய நலத்தால் வாழ்க்கையவே  , சுடுகாடா மாத்துறோம்  ,

' விளக்குகளின் விளக்கம் '

வண்ண வண்ண விளக்குகள் இருக்குது , வாழ்க்கையின் பொருளை விளக்குது  , வழிகாட்டிப் போல இருக்குது  , வழி மாறிப் போவத தடுக்குது  , பாதைய தெளிவு படுத்துது போதையில  ,  போகுறப்ப பரலோகத் துக்கே உயிர் பறக்குது  , மஞ்சப் பச்ச சிவப்பு நிறமெரியுது , மக்கள கவனத்தோட போக நிற்கச் சொல்லுது , தெரு விளக்குத் தரையப் பாத்து நிக்குது , எத்தன ஒசரத்துல இருந்தாலும் , நம்மை நம்பி உள்ளவர்க்கு , நன்மை செய்யச் சொல்லுது   , ஆறறிவு மனிதக் கன்டு பிடிப்பிது  , ஆயுள் வரை ஆயுள் காக்க உதவுது  , அரசும் சாலை விதிக்குள்ள இதையும் அடக்குது  , அசால்ட்டா போரவனுக் காயுள் விதி குறிக்குது .

' பிறப்பின் சிறப்பு '

மண்ணிலே பிறந்து  , மண்ணிலே மடியும்  ,   மனிதப் பிறவியிலே  , மனிதனின் ஆதி அந்தம்  அடங்குவ தென்னவோ அம்மணமொன்றிலே  . உடலை உயிரும் விட்டுப் பிரிந்திட  , குப்பை போலே மண்ணில் மடிந்திட  , உதவியாய் உறுப்பினை தானம் செய்தால்  உறுப்புகளால் உயிர் வாழ்ந்திடவே  , ஓர் உயிருக்குறுதுணை ஆகிவிடும் . பிறப்பும் இறப்பும் சமமென இருக்கும்  , மனதில் பணமோ ஏற்றத்தாழ்வினை படைக்கும்  , வரமாய் நமக்கும்  வாழ்க்கை கிடைக்கும்  , வாழ்வின் பலனது தானத்தால் சிறக்கும்  .

' அறிவியலால் அடிமையானோம் '

இது அவசர ஞாலம் , வீனாகும் காலம்  , அடிமை ஆகுது ஞானம்  , இங்கே எல்லாம் ஊனம் . மரணமே வாழ நினைத்தாலும்  , மனிதன் உருவில் உழைத்தாலும்  , தருணத்தில் மரணத்தை மரணிக்கும்  , தேடலற்ற வாழ்வின் நிலையாகும் உயிரை பலி வாங்கும்  . காகிதமென்பது நயகனாகுது அதற்கோ நம்மை  , நாய்ப் போல் நடித்து வாலை ஆட்டச் சொல்லுது . எதிர்த்து நின்றால் எகிரிப் பாயுது  , பதுங்கி வாழ்ந்தால் பாம்பாய் சீறுது . நெஞ்சம் உருகுது கோபம் வருகுது  , தஞ்சம் அடைந்திட ரௌத்திரம் தேடுது  , நித்தம் ரத்தம் சிந்தத் துடிக்குது  , எஞ்சும் காலம் நிம்மதி கொஞ்சம்  , வேண்டுமென்றே வேகம் கொள்ளுது  , எழுவாவ் துணிவாய்  எவனும் விழுவான் காலில் பணிவாய் .

' பெண் படும் பாடு '

பிறப்பின் இயற்கை மாறுதலால்  , அந்நாட்களில் விலகும் உறவுகள்  , அவளுள வேதனை எண்ண மறப்பது ஏன்  , அவளுக்கன்பை தர தவிற்பது ஏன் ? மாதத்தில் மூன்று நாள்  , மரணத்தின் வாயில் வரை  , எட்டிப் பார்க்க வைக்கும் வலி  , பெண்ணாக பிறந்தவர்கள் தப்பிக்க ஏது வழி . கழிவறை இல்லா கிராமத்தில்  , கவலையான காலத்தில்  , கழிக்க முடியா கோலத்தில்  , கண்ணீரில் காலந்தள்ளிய பெண் பிறப்போ  இன்றைக்கும் பல அவலத்தில் . பெற்றெடுக்க பத்து மாதம் சுமக்கிறாள் , பிள்ளை தாங்க வலி பொறுக்கிறாள்  , பிறக்கும் நேரம் துடிதுடிக்கிறாள்  , பிள்ளைக்கு உயிரைப் பாலாக கொடுக்கிறாள் . பெண்மைக்கும் வாழ்க்கைக்கும் இடையே அவள் போராடியே உயிர் வாழ்கிறாள் .

' அவலத்தின் ஆதி '

கட்சிகள் பெயரால் கட்டும் களவுகள் குறையவில்லை  , காட்சிகள் கொண்ட மனிதப் பிறப்பில்  , பிறிவினை கொண்டாடும் பேதர்களின்  , வாழ்க்கைக் கென்றும் அழிவே இல்லை . பேய் கதை பயங்கள் இல்லை இனி  , பேரரசால் வரும் பயமது ஊட்டும் பிணி  , சுடு காட்டுக்கு சென்றால்  , மரண பயமூட்டுதடா மயான மயம்  , ஓட்டுக்கு நோட்டு வீடு வருகையில் , புரியுது அரசியல் வாதி நயம் . நல்லதை செய்வதாய் ஆட்சிகட்டுக்கு செல்வார்  , கட்டு கட்டாய் கையில் காசுகள் கண்டதும் , நம் மக்களுக்கே நய வஞ்சகம் செய்வார் .

' ஈரோடு '

திங்கள் இரவினில் திங்கள் ஒளிச் சுடர் , தங்கியே எங்கும் திறண்டு நிற்கும்  , மக்கள் கூட்டம் மானம் மறைக்கும்  , ஆடைச் சந்தையை நோக்கி நிற்கும்  , இங்கே திராவிடத் தந்தைக்கும் இடமிருக்கு  , மஞ்சள் மாநாகரென மற்றொரு பேரிதர்க்கு  , கொங்கு மண்டலம் ஈரோட்டில்  , கவுண்டர்கள் உறவுகள் படர்ந்திருக்கு  , அதர்க்குள் கனிவுத் தமிழும் அடங்கிருக்கு  , சத்தியமான சாத்திய இயற்கை  , சத்திய மங்களம் தனிலே ஒழிந்திருக்கு  , சந்ததி காக்க நினைத்த ஒருவனுக்கு  , சந்தனக் கடத்தல் வீரப்பன் என பெயரிருக்கு  , அர்த்தனாரிக்கும் மலை இருக்கு  , அண்டை நாமக்கல்லில் அடங்கிருக்கு  , ஊரின் உயர் புகழ் சொல்லிடவே  , ஊரட்சிக் கோட்டை மலை இருக்கு  , கர்னாடகத் தண்ணீரை எதிர்ப் பார்த்து  , வறண்ட காவிரியும் வழியில் விழிவைத்து காத்திருக்கு  , இத்தனையும் ஈரோட்டில்  , இதற்கும் இடமுண்டு வறலாற்றில் .

' நாளைய விடியல் '

இல்லாமை என்கிற பொல்லாத வறுமையும் , கல்லாமை  என்கிற  மதிக் கொல்லி நஞ்சும்  , மது மாது  என்கிற  மனித மடமையும்  , மாற்றம் ஒன்றில் மலராதிரட்டும் . ஆயுத வன்முறை அடியோடொழியும்  , ஒற்றுமையாய் உலகொரு நாள் அமையும்  , அன்பெனுங் காதல் மருந்தாய் அமையும்  , அன்று இன்னல் நோய்கள் இல்லாதழியும் . விஞ்ஞானம் வீழ்த்திட்ட விவசாயம் விளையும்  , உயிர்க் கொல்லும் மருத்துவம் துடித்தே சாகும்  , மூதையர் மருத்துவம் முதன்மையாய் விளங்கும்  , நம் மண்ணின் சிறப்புகள் புகழோடு திகழும்  . மதங்கள் அருங் காட்சியகத்தில் இருக்கட்டும்  , அன்பெனும் மனிதம் எல்லோரிடத்தும் மலரட்டும்  , மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும்  , நல்லதோர் விதியாய் இதுவே நடந்திடட்டும் . நாளைய விடியல் நம்மை நோக்கி , புன்னகைக் கொண்டே புலர்ந்திடட்டும் .

' கடற்படை பயங்கரம் '

இது நாடா சுடு காடா , எவன் பேரிங்க அந்நியன்டா  , துப்பாக்கித் தோட்டாவும்  , துணிந்து கொன்டு துளைத்ததடா  , அலை மீது வலை வீசீ தள்ளாடும்  , தாய்க் குலத்தின் உயிர் பறித்ததடா  , காக்க வேண்டிய கடற் படையே  காவு வாங்கியது அதிரடியே . உருண்டை வடிவ உலகுதனில்  , உயிர்கள் ஆடும் சதுரங்க வேட்டையடா , கோட்டை கூட இதை கண்டு  , வேடிக்கை தான் பார்க்குதடா  , கொடுமைகள் அரங்கேருவது  , வாடிக்கை என் றாகுதடா  , நாட்டு மக்கள் இவர்களுக்கு  ,   அடிமை என்றே எண்ணுதடா  , தொல்லை தருகிற இலங்கைக்கும்  , துரோகிகளான இவர்களுக்கும் என்ன வித்தியாசமடா  , மீனவரென்று சொல்லுதடா அரசுகள்  , தன்னை வீனென ஒப்புக் கொள்ள மறுக்குதடா .

' ஜல்லிக்கட்டு '

வீரத்துக்கு பேரு போன மண்ணு இது  , இங்க மாடு கூட மானங்காக்க துணியுது  , எங்க நாட்டு கலாச்சாரப் பண்பு இது  , பாரே எங்க விளையாட்ட வேடிக்க பாக்குது  , திமிலுள்ள காளையென திரியுது - இங்க  திமிரா எகிரிப் பாயுது  , பல் ஆயிரப் பரம்பரை இனம் இது  , வேட்டி கட்டும் மானத் தமிழ் கூட்டமிது  , வீரங்காட்ட இளஞர்கள் ஆடுகிற ஆட்டமிது  , திட்டந்தீட்டி தடை போட்ட கூட்டமது  , எங்க போராட்டத்த பாத்து பயந்தோடுனது  , வண்டி கட்டி தூக்கி செல்லும் போது அது  , சுமை தாங்கும் எங்க வீட்டுப் புள்ள இது  , பசி அடக்க மேச்சலுக்கு போகுமிது  , படைய பார்த்து பாஞ்சிப்பாயும் காளையது  , மண் புகழும் கொடி கட்டிப் பரக்குது  , விண்ணை தாண்டி எங்கள் வீரம் ஒலிக்குது  , துள்ளிக்கிட்டு மல்லுக்கட்ட துணியுது அது  , ஜல்லிக்கட்டில் எட்டி முட்டத் துடிக்குது  .

' தன்னம்பிக்கை '

தட்டி கேட்க நினைத்தால் - சிலர்  வெட்டி கொன்று போடும்  -  இங்கே  கவலையின்றி வாழ்ந்தால் - நம்  முயற்சி வெற்றி பெரும் காலம். கொட்டி கொட்டி கொடுக்கும் கைகள் , பிறரை குட்டி குட்டி பறிக்கும் சிந்தை சீற்றமாகு ம் பொழுது , ரத்தம் கூட கொதிக்கும்  நித்தம் போராடிடவே துடிக்கும் . எச்சம் மிச்சம் எல்லாம்  இங்கே உச்சம்  கொள்ள , லட்சக் கணக்கில்  லஞ்சம்  கேட்டு நித்தம் தொல்ல. இனிமேல் இங்கே இல்லை  யாரும்  நம்மை வெல்ல  தன்னம்பிக்கை கொண்டால் போதும்  நல்வழியில் நாமும் நடந்துச் செல்ல . முயற்சியோடு பயிற்சி எடு , தோல்வியிலும் எதிர் நீச்சலிடு , புலியென பதுங்கிப் பாயாமல் அங்கம் முழுதும் ரௌத்திரம் கொண்டு , அங்கங்கே நாம் பொங்கி எழுந்தால் , என்றும் வெற்றி தங்கும் நம்மைச் சுற்றி . மது மாது மத  சாதி  மனிதனின் விரோதி  எல்லாமும் அகன்றுவிட்டல்  நாமே தூய்மையின் அகராதி .

' காந்தி '

களமிறங்கி ஆடிச் சென்றான் , கதராடை அணிந்தவந்தான்  , கருனை உள்ளம் கொண்டவந்தான்  , காந்தி எனும் பெயரைக் கொண்டான்  , அச்சமின்றி அகிம்சையை  , ஆயுதமாய்  ஏந்தி நீ  , இச்சை கொண்ட சுதந்திரத்தை  , ஈன்ற தந்தை நீயன்றோ  , உயர் தேசந் தாங்கினாய் , ஊன்றுகோல் கொண்டு நீ எண் திசையிற் பாதியில்  எங்கெங்குமுன் புகழ் ஏற்ற மிக்க வாழ்விலே எளிமையாய் வாழ்ந்தவன்  , ஐய்யா உன் பெயர் போதும்  அந்நியனும் ஐயமுற  , ஒழிந்தது உன் உயிர் மட்டும்  , ஓங்கியதுன் புகழ் வான் முட்டும்.

' போராட்டம் '

மண்டியிட்ட ஆட்சியில் சண்டைப் போட்டு வெல்லுவோம் , மாண்டுவிட்ட போதிலும் போராடியே வீழுவோம் . வாக்களித்த அரசுமின்று  வாய்க்கரிசியை போட்டது , அடையாளமாகிய  கைவிரல் மையது  , அநியாயம் நடத்திட  போட்ட திட்ட பொய்யிது  , கறை வேட்டி கரை சேர  , மக்களையும் கப்பலாக்கி  , மூச்சு திணற மிதக்கவிட்டு முதுகின் மேலே மிதிக்குதே , வாக்குப் பிச்சை கேட்பதும் வழக்கமாகிப் போனதே . காந்திப் படமொன்றுதான்  காகிதத்தில் வந்ததால்  , காசுக்காக செய்யும் வேலை காந்தியமென்றாகுமா ? இலை தழையில் உடையணிந்தான் நாகரிகம் பிறந்தது  , உழவரின உடுக்கை இழப்பு உரிமை இன்மை உணர்த்துது . பகல் நன்பகல் இடையே  நான்கே மணி நேரம் தான்  , போராட்டமே வாழ்வென்றால் நாளும் நமக்கு பாரம் தான்.

' குமரியும் ' ' குமுறலும் '

எட்டுத்திசை உள்ளது , எத்திசையும் இவன் உயிரை துச்சமென எண்ணுது  , தாக்கம் கண்ட தலைநகரை செய்தி சொன்னது  , ஏக்கம் கொண்ட குமரிக் குரலும் நீதி கேட்குது . காற்றும் புயல் வழி புரட்சி செய்தது  , குமரியும் குமுறல் காட்சியானது  , பசியை போக்க படகில் சென்றவன்  , பாடையில் வரும்நிலை யாகியது . பாரில் படர்ந்த நீருமிங்கு  , பாவப் பட்டவன் கண்ணீராகியது  , ஆலோசனைக்கென அரசும் அங்கே கூட்டம் போட்டது  , கணக்கைக் கோடிக்கணக்கில் காட்டிக் கொள்ளையடிக்கப் பாக்குது  , அழுகுரலிங்கு முரசாய் அவன் உயிர்ப் பிரிவைச் சொன்னது  , உழவன் நிலம் போல் இவனது வாழ்வும்  ( தரி ) சாக உள்ளது .

' நாடோடி '

சாலை ஓரம் கூடாரம்  , பசியோடு போராடும்  , அங்கும் சில உயிர் வாழும்  - கூத்து  ஆடி உயிர் காத்து வரும் . ஏங்கிப்பார்க்கும் குழந்தைக்கு கல்வி மட்டும் கிடைப்பதில்லை  , பள்ளி செல்ல நினைத்தாலும் சாதிச் சான்றே பெருந் தொல்லை  , மனிதம் என்பது மலரவில்லை, மதி தரும் கல்வியில். தனி மனிதன் உலகில் மாறும் வரை ஏழ்மை ஒழிய வாய்ப்பு இல்லை  . புரியா மொழியே பேசும் கூட்டம்  , புசிக்கும் உணவை பகிர்ந்து ஊட்டும் , அன்பை என்றும் ஆழக் காட்டும்  குறவரினத்துக் குதூகளிப்பில் முழுமையாய் மூடாதிடமிதுதான்  , முதலிரவும் இங்கே நடப்பதுதான். நாடோடி வாழ்வோடு இயல்பின்  முரணாய் வாழ்பவர்தான்.