Posts

மனைவி

பருவத்தில் விதைத்த ஆசைகள் பயிராகி விளைந்து நிற்கையில் உருவத்தில் உள்ள ஆசையை  உருத்தெரியாமல் சிதைத்தவள் காட்சிப் பிழையில் கழிந்த இரவுகளை  காதலை சாட்சியாக்கி மாற்றினாள் வாலிபத்து வயசுக் கோளாறுக்கு மருந்தாய் வந்தென்னைத் தேற்றினாள் காத்திருந்த காதல் சுகம்  கனிந்தது அவள் வார்த்தையால் ஆனால் ஏக்கம் இன்னும் தொடருது  அவளுடன் வாழும் நேரம் எதிர்ப் பார்ப்பதால்

ஓட்டி

விதவிதமாய் சுழற்றிடுவான்  விழியை உறுதுணை ஆக்கிடுவான் விதியோடு விடையாவான் வினாவாகும் பயணத்தில் கால்களில் வேகமும் கைகளில் திசையையும் கண்களில் கவனத்தையும் விழிப்புடன் கையாள்வான் அதி வேகமும் மித வேகமும் அவனெடுக்கும் முடிவுகளே ஒத்துழைப்பு தருவதெல்லாம்  பயணத்தின் பாதைகளே பந்தயங்கள் சிலநேரம் அபாயங்கள் பல நேரம் எதிர் வரவையும் எந்நேரம் கருத்தாகக் கையாளும் எதிர் வெயிலும், எதிர் ஒளியும் எக்குத்தப்பாய் இயக்க வைக்கும் ஏதோ சில வேளைகளில் உறக்கம் வந்து மயக்கம் தரும் நேரத்தில் ஓய்வெடுத்து  நேரத்தையும் கடைப்பிடித்தால் அச்சுகமான பயணம் அழகானத் தருணம்.

பிள்ளை

தத்தி வந்து  முத்தம் தரும் மொத்த அழகாமே திக்கி வரும்  வார்த்தைகளே திகைக்க வைப்பாமே விழி அசைவே  காவியத்தை விளிக்கும் மொழியாமே அன்னம் தின்னும்  வேளை அதைக்- கன்னம்  தின்பதழகாமே சத்தந் தரும் பொம்மைகளே சந்தோசமாமே நித்தம் பல  சேட்டைச் செய்யும்  பிள்ளையது பெற்றோரின் பெருந்தவமாமே

சன்னலோரம்

பேருந்தின் சன்னல்  ஓரத்தில் பேசிக்கொண்டே வருகிறேன் என்னுடனே நான் வருடங்கள் வேகமாய் ஓடுவது கற்பனை சில நிமிட சிந்தனை மட்டும்  பல வருட காட்சிகளை காட்டுவது எத்தனை ஏக்கம் அத்தனையும்  சுற்றத்தின் தாக்கம் கட்சிகளின் வண்ணக் கொடிகள்  சாலையை அலங்கரிப்பதை சட்டனெ பார்க்கும் போது  நீ சாதித்ததென்ன என்று  பட்டென அறைகிறது  வெற்றியின் விடா முயற்சி. சிலநேரப் பயணம்  இயக்கத்தில் நிறுத்திய  வாகனத்தின் இதயக் குமுறலாகிறது உழைப்பவனை தூற்றும் ஊரார் வாய்கள் சாதனையை விட சிறந்ததாகிறது குறுகிய நேரப் பயணத்தில்  சன்னலில் புகும் காற்றென நினைப்பதற்குள்  தாமதமாகிறதென திட்டித் தீர்த்தத் தாயின் குரலை பதிவிடுகிற தொடுதிரைக் கைப்பேசியின்  செவிக்கான ஒலிபெருக்கி 

தேர்

சக்கர வண்டியில்  அதிக நெடுங்குச்சி கட்டி அலங்காரத் துணிக் கொண்டு  அழகாகச் சுற்றுகையில் மேடையும் வியப்புறு கூடமாகிட கோவிலுடையவன் கூடம் வந்ததும் குதிரை பொம்மைக் கட்டிவிட்டு ஆமை வேகம் கொண்டதனை கருவிகளின் இசையோடு நாதத்தின் ஒலி சேர்த்து நார் திரித்த கயிற்றை நன்றாகக் கட்டி  நாடிவந்தோர் உள்ளங்கை நழுவாமல் பற்றிக் கூடத்துக் குடி கொண்டோன்  நான்கு வீதிச் சுற்றி எல்லோரின் வாசல் வந்து உள்ளோர்க்கு உயர்வு தந்து விதவிதமாய்க் கடை போட்டு பிழைப்புக்கு வழித் தேடி உழைப்பாரோடுச் செல்லும் வழியில்  உன்னையும் திசை திருப்ப  முட்டுக் கட்டை போட்டிடுவார் தன்னுயிர்க் கொண்டு உன்னுயிர்க் காத்திடுவர் அவர்களுக்கும் கருணை செய் ஆகையினால் மீண்டும் நிலை அடையும் வரை வீதிதோரும் சோதி நிலை  

அம்மணம்

தெளிந்த வான் நிலை கூட்டுப் பொருள்களின் கூடு குறிகளின் விடுதலை பிறப்பின் அடையாளம் மானத்தின் பேறுகாலம் உறவுள்ள தனியன் ஆசையற்ற மனம் சிந்திக்கா மூளை துறவின் தூய்மை உடைகளின் உயிர் வெறுமையின் உச்சம் கதவில்லா வீடு இலைகளில்லா மரம் அலையற்ற கடல் உயிருக்குதவா காற்று  கருவின் பிறப்பு இறப்பின் கருச்சுமை

இனி அவள்

காற்றோடு கதை பேசி  ஒளியோடு உறவாடினேன் பாதையின் இருளில்  பயணம் செய்கையில் வாலிப வரவில்  வருகிற காதலில் வந்த தோல்வியைக்  கடந்து வாழ்கையில் கரம் பிடித்தவள் - என்  மனம் பிடித்திட படும் இடர்களை தினம் நினைக்கையில்  பெரும் உளைச்சலை  தரும் என்செயல் தவிர்த் துனக்கென தலை யெடுக்கிறேன் அன்புப் பயிரில் - என் செயலால் விளைந்த இடராய் இருக்கம் களையைப் பறிக்கிறேன் இனி(ய/அ)வளுக்காய்  என்னை அர்ப்பணிக்கிறேன்.

ஆணுக்குள்

அடைப்பட்ட இடத்தில்  அலைப்பாயும் மனதை அடக்காமல் கொஞ்சம்  அழகாகக் கெஞ்சும் திரைகளைத் தொட்டதும் திரிகிற எண்ணங்கள்  திணரும் போது  திருந்தத் தவறும் ஆசை உணர்வால்  ஆளைக் கொள்ளும்  ஆழ்ந்த மாயை  ஆணின் காமம்  உளத்தைத் தந்து  உறவில் நுழைய உயிர் ஆகிறது உடையவன் காதல் தேவை யாதெனத் தேடித் தீர்ப்பவன் தேடப் படுகிற  தேவையர்த் தலைவன்

இருட்டு

கதிரவன் மறைந்ததும் காரிருள் படர்வதும்... கரு உருவாகிட  சினை முட்டைக்குள் சிறந்ததும்... உள்ளொளித் தேடலில்  உடனடியாவதும்... சிக்கல் நேரத்து  சிறந்த முடிவின் முன்  உருவாவதும்... முந்தி வரும் விந்ததுவோ கருப்பையைத் தொடுவதும் கருமுட்டைக்குள் சமாதி செய்து பத்து திங்கள் விடுவதும் உறங்குகிற வேளையில்  விழிக்காமல் தெரிவதும் விழிக்கும் வேளையில்  விடியாமல் இருப்பதும் விழித்தும் விழிக்குப் புலப் படாதவர்க்கும் விதியாய் அமைந்த விடையாம் இருட்டு

அவள்

கூந்தல்  கிழிந்த சவ்தாள்  கிளப்பிய வாசமோ வகுடெடுத்து வாரிய வாலிபத்து மோகமோ உச்சி முகர்ந்து உளமார முத்தம் தந்ததுமென் தலை  தலைகீழாய் சுத்தும் முகம்  ஏந்திய கைகளில்  தாங்கிய பூவோ பூ போல் மலர்ந்த புன்னகை முகமோ அவள் - மனங்கவர் மங்கை என் பாவம் போக்கிட அன்பை பொழியும்  கருநிற கங்கை. கை வளையல் கையில் எழுந்த ஒலியோ இதயத் துடிப்பின்  காதல் மொழியோ கரமுரச ஆசை  காதல் கண்ணை  மறைக்கும் பொழுதும் அவளின்  கரம் பிடிக்க ஆசை கால் அவளின்  கணுக்கால் மூட்டுக்கு  முகமிருந்தால் அதில் அவள்  கொலுசின் முத்து மூக்குத்தியாகிருக்கும் தரைக்கு பாரமாகிற  அவள் பாதம் எனக்கோ என்றும்  தலையனையாய் இடை  குழந்தை விளையாடும்  சருக்கு மரமாயில்லாமல் நான் சருக்கி விழுந்தேன் அது அவளின் வளைந்த இடை சேலை முந்தியும் சுகமாய் சாகிறது  இடைக்கும்  உடை க்கும் இடைப்பட்ட இடத்தில்

கை வீசம்மா கை வீசு

  கையிற் காசில்லாமல் ஆசைக்குப் பஞ்சமுமில்லாமல் மனக்கோட்டை மாளிகையில் எத்தனை மயக்கங்கள்   அழகு சாதனங்கள் ருசியான நொறுக்குகள் சத்தான காய்கனிகள் பொருட்காட்சி உடனான பொழுதுபோக்குகள் ஆடை அணிகலன்கள் ஆடம்பர வசதிகள் அணிதிரண்டு நின்று கண்டதும் கவர்ந்திழுக்க   விதமானப் பூ வகைகள் வீதியோர ஆலயங்கள் சிலுவைக் கோவிலும் மசூதிக் கோவிலும் மனதில் தோற்றுவிக்கும் வழிபாட்டு ஏக்கங்கள் இத்தனை அழகும் அவா உருவாக்கியது அவ்வழியே செல்லுகையில்

தாடி

மெல்லியதாய் அடர்ந்து வண்ணங்கலளால் வசீகரிக்கும் எச்ச கழிவுகள் கூட சிலருக்கு உச்ச அழகைத் தரும்   நீளம் குட்டை தட்டை வடிவுகளில் மற்றோரைக் கவர முகத்தோடு முளைத்து அழுக்கானாலும் ஆணுக்கழகாகிறது   புள்ளிங்கோக்களின் பொழுது போக்கோ ? நிராகரிப்பின் நினைவோ ? வேண்டுதலின் விளைவோ ? தெரியாமல் தவிக்கிறேன்   ஆணின் முகம் பலரின் மனங்கவரும் சிறிய அளவிலான மயிர் நிறை உலகோ  

சூடு

  வீதியைப் பார்க்கிறேன் உதித்து மறையும் சூரியனின் சூட்டை உணர்கிறேன்   உதிக்கிறது சிந்தை இப்படித் தானே இருக்கும் ஓயாமல் உழைக்கும் உள்ளங்களில் உள்ளிருக்கும் ஒவ்வொரு வேளைச் சோற்றுக்கும் துடிக்கும் வயிற்றில் தணியா நெருப்பு   செத்து எரிக்கும் கொள்ளியை விட வாழும் போதே சாகும் வேதனையானதுப் பசி

சுனிதா வில்லியம்ஸ்

கருவறை இருட்டில் உதித்து பிறப்பில் மண்ணை மிதித்து சமூக உருட்டைக் கடந்து பாலினப் பேதம் மறந்து சரித்திரம் படைக்க  பிறப்பாலே சங்கமித்தாய்  பெற்றோரால் இப்பாரதத்தில். நாடுகளிடை உள்ள நல்லுறவில் நாடுகள் தன்னிடம் - உதவியை  நாடிடும் அளவுள்ள படிப்பறிவால் நல்ல இப்பிறப்பில் உன் நம்பிக்கையை நாங்களும் கண்டு வியந்திடவே நாங்கள்  காட்டையும்  கடலையும் காற்றையும்  நெருப்பையுங்கண்டு களித்துள்ளோம் காண இயலாப் பெரு வெளியில் கீழிழுக்காப் புவிவிசையில் ஆய்வு செய்யச் சென்றவளே இயந்திரப் பழுதுக் காரணத்தால் பெருவெளியும் உன் வரவில்  நெடுநாட்கள் மகிழ்வடைய பெருந்திட்டம் போட்டிற்றோ? மானுடத்தை விஞ்சும் ஒரு மறைப் பொருளை உணர்த்திற்று மதித்துணிச்சல் நிறைந்திருந்த மங்கையுடனான மாண்புமிகு நண்பரையும் வானவெளியிலே வாழ இடம் தந்து  வருங்காலத் தலைமுறை  வாழ வழித்தந்து. அறிவுடைய மனிதர்களின்  ஆற்றலுக்குச் சிறப்பு செய்து அறிவுச் சிக்கலினை  அங்கங்கே திருத்த  காலத்தின் பதிலில் ஆசானாய்ப் பிறப்பெடுத்து, அண்டந்தாண்டிய அவ்விடத்தில் அவளுக்காய் அமைந்த  அழகானத் தாய் வீடோ? ஈர்ப்பு வ...

ஆண்டு விழா

ஆடிப் பாடும் ஆசையுடன்  மேடை ஏறும் குழந்தைகளுக்காய்  கூடுகிறதொரு கூட்டம். பள்ளிப் படிப்பும் பழகும் நட்பும் நினைத்துப் பார்க்க  சுகமாய்த் திகழ ஒவ்வொரு ஆண்டும்  விழா எடுக்கும்  திறமையின் அங்கீகாரமும்  உழைப்பின் உன்னதமும் வெற்றியின் ருசியும் விடாமுயற்சியின் பிறப்பும் குழந்தைத் தொட்டு  குடும்பப் பிணைப்பும் வளர்ந்தோர் நினைவில்  வருகிற  பள்ளிக் காலப்  பழைய நினைவென மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொண்டாடிப் பழக கற்றுக் கொடுக்கிறது  ஆண்டு விழாக்கள்.

செத்துப் பிழை

சிதறிய அரிசி மலையுயர மனிதனுக்கு ஒரு பருக்கை‌. சுமக்க வழியின்றி இழுத்துச் செல்லும் எறும்புக்கு அது பொக்கிஷம். நான் ஒரு எறும்பு பெற்றோர்களின் பாதங்கள் தொடும்  உதடுகளுக்கு பாவங்கள் இல்லை. கவிதையும் தந்தையும் ஒன்று வார்த்தைகளால் வாழ்வை செதுக்குபவர்கள். வாழ்ந்து பாருங்கள் கவிதையின் வார்த்தையிலும் தந்தையின் வாழ்த்திலும் அவன் எனும் பேரழக ராஜனுக்கு இவனே ஆணழக வேந்தன். சாஸ்திரங்கள் என்பது சடங்கு  ஆன்மீகம் என்பது சங்கமம், சடங்குகளை பின்பற்றினால் தான், சங்கமத்தை அடையும் போது சடங்குகள் எதற்காக என்று விளங்கும், இல்லையேல் சந்தி சிரிக்கும். சங்கமமடைந்தால் உடலே ஆலயம் உள்ளமே தெய்வம். அற்ப சுகங்களென்று  சொற்பமாய் எண்ண வேண்டாம். அற்ப சுகங்களே சில நேரம்  அற்ப ஆயுளுக்கு காரணமாகவும், அற்ப ஆயுளில் சில நேரங்களில்   ஆகச் சிறந்ததுவு மாகலாம். அற்ப சுகங்களுக்கு ஆசை படுங்கள் தவறில்லை  பழக்கப் பட்டுவிடாதீர்கள் பழிவாங்கியே தீரும். யாதுமானவன் இறைவன்  அவனை அடைய நமக்குப் போதுமானவனாய்  பெற்றோர் உ(ரு/ற)வில். ஜோதியானவனை  வீதியில் தேடுவதும். நீதியினை நிதியால் வெல்வதும். நில...

அடுப்பாங்கரை

உன் அடுப்பாங்கரையின் வெப்பம்  உனக்குள் இருக்கும் கோபமாய் அடுப்பாங்கரையின் அலங்கோலம்  உன் மனதில் மாறா காயமாய் அடுப்பாங்கரையில் அவிந்த வாசம்  உன் உள் ஐச் சமைத்த பொறுமையாய்  அடுப்பாங்கரையின் அலமாரி உன் அவசர புத்தி அடுக்குகளாய் அடுப்பாங்கரையின் அடுப்புத் தீ உன் ஆசைக்கு இட்ட கொள்ளித் தீயாய் தலையில் நீர்ப் பட  சிலரின் தேகம் குளிரும் பெண்ணானவளுக்கு  தலையில் நீர்ப் பட  வியர்வைச் சொட்டும் அடுப்பாங்கரை அனல் தணிக்க தூங்கும்முன் தலை  நீரைத் தாங்கும் பாவம் அடுப்பாங்கரைக்கு அவள் மேல் என்றும்  அவளே, அறியா வகையில்  ஒருதலைக் காதல் .

இதயம்

தரையின் இதயம்  தரைக்குக் கீழே  இருப்பதினால் தான்  தனக்குள் புதைந்த விதைகளை  தரைக்கு மேலே முளைக்க வைக்கிறது மனிதனின் இதயம்  மார்பில் இருப்பதை மறந்து மண்டைக்கு மேலே  இருப்பதை போலே  நினைப்பதினால் தான்  தன்னை மட்டும் யோசிக்கிறது.

தாத்தா

நள்ளிரவு நேரத்தில்  எத்தனையோ எண்ணங்கள்  பித்தனாக்கிவிட யுத்தம் செய்கிறது எண்ணத்தில் என்னவென்று  புரியாமல் தள்ளாடும்  வயதுடைய அவருக்கு  என்னதான் தவமோ  ஏதேதோ பிதற்றும்  பித்து பிடித்த கிழவனுக்கு சித்தத்தில் சதுராடி யுத்தம் செய்யும் போராளி  எதிராளி யார் என்று  தெரியாமல் கதறுகிறான்  சிலநேர சிந்தை தெளிவு  எத்தனையோ காலத்தின்  அத்தனை மகிழ்ச்சியையும்  அழகாக சொல்லிவிட்டு  அந்திகாலம் இதுவோ என்று  அவன் கொள்ளும் பயத்தாலே  அறிவுரைகள் கொடுக்கின்றான்  மூன்று காலில் நடக்கையிலே  முக்காலம் உணர்ந்தவனாய்  துன்பமின்றி எக்காலமும் நாம் வாழ நல்லதொரு வழிகாட்டி ஆனாலும்  அவன் படும் பாட்டை  நாம் காண முடியாமல்  நாம் கொள்ளும் பயமே  உணர்த்துவது அவரின் இக்கால நிறைவை..

குடும்பம்

வயது மூப்பு வரும் வார்த்தை தடித்து விழும் பேச்சு எரிச்சல் தரும் ஏளன பார்வை ஒன்றே  எதிரியென எண்ண வைக்கும் இயலாமை ஏற்காமல் இயங்கிட இதயம் துடிக்கும்  கடந்த கால அனுபவத்தில் கற்சொல்லடி பட்டதெல்லாம் அனுபவமெனும் பெயரில் அங்கங்கு வழிநடத்தும் காசு பணம் பகிர்ந்தளித்தால் பார்த்து கொள்வார் என தோன்றும் எப்போதும் அவர் சொல்லை  கேட்கின்ற ஆள் தேடும் ஏதோவோர் சூழலிலே எதிர்ச் சொல்லைக் கொட்டி விட்டால் அவருள்ளம் வெந்து விடும்  நமக்கோ தொனதொனப் பேச்சு  தொந்தரவாகிவிடும் வேலை விட்டு வீடு வர  கோபங்கள் கொப்பளிக்கும் நிதானமே நிதானமாகும் ஓய்வெடுக்க உளமேங்கும் மீத வேலை மீண்டும் வந்து துரத்திக் கொண்டே தானிருக்கும் எல்லோரின் கருத்துகளும்  எதிர்பாராமல் எதிராகும் உடல் நலக் குறைகளும் உள்ளூர எரிச்சல் தரும் என்ன செய்வதென  புரியாத புத்திக்கு யுத்தகளச் சிந்தனையில் அமைதிக்காய் அலைபாயும் வளரிளம் பிள்ளைகளோ  கண்ட வாழ்க்கை சுகமென்று வீட்டிற்குள் வழக்காடும்  வீட்டுக்கு பொருளீட்ட வெளி சென்ற வேலையாள் வீட்டுக்குள் வரும் போது கணவனாக கனவு காண கண்களாலே கொப்பளிக்கும்  கோபமான வார்த்தைக...

அந்தி மாலை

அந்தி சாயும் இந்த வேலை  வானில் எங்கும் மேகமில்லை  அங்கிங்கு தெரியும் கதிரும் மனதை கொஞ்சம் கவரக் கெஞ்சும் கண்டு களிக்க கண்விழிக்க  காணுகின்ற வான் திரைக்குள்  எண்ணத்தின் ஏக்கங்களா மனதுக்குள் மயக்கங்களா இருளுக்கும் பகலுக்கும்  இடைப்பட்ட வேளையிலே  மனமும் வானும்  எதையோ எதிர்பார்க்க வாழ்க்கை மட்டும் மனிதனிடம் வழங்கியதைச் சரிபார்க்க  வாழ்நாளை துணையாக்கி  கடன் பெற்ற பிறப்புக்கும்  கடன் கொடுக்கும் இறப்புக்கும் இடையினிலே விருப்பும் வெறுப்பும் பொறுப்பும் துறப்பும்  நட்பும் மகிழ்வும் பகையும் சினமும்  உணர்வென வாழும் உயிரில் புகுந்து

நில இளவன்

இல்லற ஆசை எனும் இன்ப காற்று வந்து  சில்லென இருளில் மெல்லத் தீண்ட  சிற்சிறு விண்மீன் சித்திரமாகிட தென்றல் பேசும் மொழியை புரிந்து இலைத்தழைகளும் தலையை ஆட்டிட மாய உடலென படிந்த நிலத்தில் உயரிய மலைகள் தலையென விளங்க  ஆழ்கடலழகிய கால்கள் ஆகிட  வண்ண விசாலப் பசுமை நிறமோ  வாலிப எழிலுடன் வசீகரம் செய்ய இருள்வரும் பொழுதில் இருக்கிற வியப்பை  இன்ப மென்றெண்ணி மோகம் கொள்ள  பால்வெண் நிறமதி முக அழகில் பதினாறு செல்வத்தை மறைத்தவளை அன்பவா கொண்டு சிந்தையிலே உன்னை மயக்கத்துணிந்தவனை கண்டு வெட்கி முகிலுக்குள் மறைகையிலும் உன் எழிலும் மறையாமல் ஒளிர்கிறதே கரு மேகத்தை தூது விடுத்து மழை நீர் போலன்பைத் தூவித் தெளித்து  தனக்கு உயிர் தரும் கதிரவனை  நாற்றிசைப் பறந்த  இளவனாம் திரு நிலத்தவனை  பார்வையால் பயனுறச் செய்ய அன்பவா வாய் மட்டும் நிலை பெறவே அடைய முடி...யாதென எண்ணி வருத்தம் கொள்ளாமல்  தன் வாழ்வில்-பல்லுயிர்  புத்துயிர் கொண்டு வாழ்வதற்க்காய் தியாகம் செய்தானிந்த நில இளவன். குறிப்பு :  இளவன் என்கிற வார்த்தை இள வயது உடையவன் என்பதை குறிக்கும்.  அன்பவ...

மழைக்கால தொடர் கதை

ஈரத் தென்றல்  எனை மீறிச் செல்ல இரவுச் சந்தன மேகங்கள் பன்னீர்ப் போல  சந்தக்கவிமழை தூவிச்செல்ல.   சிந்தித்து  சூடாகிய மண்டையோட்டுக்கு விடையானது மழையின் சுவடு - அதன்வழி வந்த உள்ளக் குளிருக்கு  உடையானது தேநீர்ச் சூடு. அரைகுறை மூச்சிழுத்து  பழகிய எனக்கு  ஆழப் பெருமூச்சு  அடிவயிற்றை தொட்டவுடன் அங்கமெல்லாம் சிலுசிலுத்த அக்கணத்தொரு ஒளித் திருடன்  வெடியைப் பற்ற வைத்துப் பதுங்கியதும்  வெடித்தவுடன் இடியாச்சு இப்படியே இரவு கழிந்து  கதிர் வராமலேயே விடிஞ்சாச்சு.... இது மழைக்காலத் தொடர் கதையாச்சு.

மாலைக் கதிர்

அந்தி சாயும் சூரியன்  அநியாயமாய் சிவக்கிறான்  இடைமறித்த மேகங்களின்  எதிர் போரை கண்டதும். நாளை விடிவு தர முடியாதோ இந்நாளே என் நாளின்  இறுதி நாள் ஆகிவிட்டால்  என்ன செய்வதெஎன்று  ஏக்கத்தோடு மறைகிறான் எதிர்பார்க்கிறேன்  நாளை விடியலில் ஏக்கங்கள் புன்னகையாய் மாறி  அவன் பிரகாச ஒளியைக் காண

மீன்கள்

வலைப் போட்டுப் பிடிக்க பொரிப் போட்டு வளர்ப்பர்  சிலர் கால் நீட்டிக் களிப்பர் அவை கடிப்பதை ரசிப்பார் சிறார் விளையாட்டுக்கும் உணவாகும் கருவாட்டுக்கும்  உயிரையே விடுவர். பசியென கரை வரும் புசித்திடத் துடித்திடும். படிகளில் படர்ந்து பாசியாய் நிறைந்தது - அதன்  பசிப் போக்கிட பதிலாய் அமைந்தது. அவதார முதல் ஆன  அழகான பிறப்புடைய மீன்கள்‌.

மதுவே உயிரே

கலப்படமடைந்து கைக் கோர்த்துக் கலந்து நின்று வெளியில் விழிப் பார்த்தவற்றை வழிமறித்ததால் வாயடைத்தேன் ஆயிரமாயிர ஓட்டைகளுடைய வானின் மானம் காப்பாற்றப் பட்டாலும் மதியிழந்து மதுகுடித்த முகில்கள் மதியை எதிர்க்கப் போர்த் தொடுத்தாலும் குடி குடியைக் கெடுக்க குடிப்பழக்கம் உயிரைக் கெடுப்பதாய் மதுவோடு உயிரும்  மண்ணாகிப் போச்சு, புதைந்த விதைக்கு பாடமெடுத்து உயிரூட்ட. மதுவே கதியாய்  மதுவே விதியாய்  மதுவே உயிராய்  தானும் வாழ்ந்து  பிறர் வாழ - மழையாகிறது கார் முகில்.

நண்பகல்

காலணி தொலைத்த கவலையில் கால்கள் எங்கோ போகுது வலுவிழந்த வேளையிலே வான் முகில் வாழ்க்கையைத் தந்தது. ஸ்.... என வாய்ச் சத்தம் போட சூரிய ஒளியால்  சாலைகள் கால்களில்  செய்கிற யுத்தம் ஆக அக்கினிக் கோலத்து ஆகாயச் சூரியனோ நடுவானம் ஏறி வெறுங்காலில் நடப்போரைக் காரித் துப்ப தார்ச் சாலையைத்  தன் வாயாக மாற்றி கால்களில் காயம் செய்யும் காலைக் கண் வணங்கும்  கதிரவனின் காலக் கோலம் நிழல் தேடித் திரியுமிந்த செருப்பில்லா வெற்றுக்கால்  நடக்குமிம் மதிய நேரம்.

இயற்கையின் இதயதுடிப்பு

காலில் மிதி பட்டு காற்றில் அலைந்து  தலையில் அழுக்காய் ஆடையில் புழுதியாய்த் தூசியும்  நித்தம் வாசல் பெறுக்கினாலும் குப்பையுடன் தான் கிடக்கும். இதமாய் உணருந்தென்றலின் மொழி விதமாவதை யாரது அறிவது அறிவிற் சிறிய மனிதருக்கு அறிவுரை கூறும் இயற்கையிடம் ஆவேசம் நிறைந்திருக்கும் அதன் பெருங்கோபமிங்கு பதிலுரைக்கும். காற்று ஓலமிடும் மரங்கள் போர் புரியும்  கார் மேகத் துதிரமும் கண்ணீர் விட்டு அழும் சூறைக்காற்று போரில் உயிர் நீத்த மேகத்தின் தியாகத்தால் உருமாறி  சிற்றறிவு மனிதருக்கு  காட்டாற்று வெள்ளமென புயற்காற்றுப் பூதமென பேரலை உமிழ்வென சீற்றத்தாற் பாடமெடுத்து சீர் செய்து சீராகிறது  இயற்கையின் இதயத் துடிப்பும் இங்கு.

உதிரத்துளி

பயணத்தில் பார்த்த பணிகள் பயனுள்ளதாய் உணர்ந்த விழிகள்! பாடு பட்டு உழப்பவரே எப்பாடு பட்டேனும்  உழவுத் தொழில் செய்பவரோ கழனியைப் பதமாக்க நீரூற்றிச் சேறாக்கி  உழுது நில வளங்கூட்டி உயிரி உரமிட்டு வித்தைப் புதைத்து வித்தும் புத்துயிர்ப் பெற்று முளைவிட்டு வளர உயிருக்கு உணவளித்து அழகுக்கு மலரளித்து மூலிகைத் தாவரமாய்க் காலத்து கனி தரும் மரமாகி வேளாண் தொழிலின் பலமாகும் அனைத்தும் உழவனின் உதிரத் துளியாகும்.

இப்படி நடந்தால் எப்படி இருக்கும்

ஊரின் பேரிருக்கும் ஆனால் ஊரிருக்காது வயிற்றில் பசி இருந்தாலும் சோறுமிருக்காது  நா வறண்டு போனலும் நனைக்க நீருமிருக்காது உயிர் இருக்கும்  உயிர் வளி இருக்குமா பூமி இருக்கும்  நாம் எங்கு இருப்போம் நடந்து செல்லும் கால்கள்  நாளை பறந்து செல்ல நேரிடுமா எத்தனையோ தொழில் செய்கிறோம் எதில் தான் பொய்யில்லை உழவை தவிர உயர் தொழிலில்லை  உயிருக்கிதைவிட உயர்வேதுமில்லை இன்று கானகத்தில் வீடு கட்டி காலத்தை கழிக்கிறோம்  நாளை வீட்டின் மாடியிலேயே  விவசாயம் செய்வோமோ சேர்க்கை இல்லாமலே  செயற்கை கரு உருவாகிறது இனி கருவுக்கு பதிலாக  கருவி உருவாகிடுமோ தாலி கட்டி கொள்ளாமல் கல்யாணம் செய்யாமல்  காலம் மாறி போகிவிட்டால் காமம் காணமல் போகிடுமோ அறிவியல் கூட  ஆணின்றி கரு சுமக்க பெண்ணுக்கு உதவிடுமோ அறிந்து கொள்வோம்  ஆணாக இருப்பதற்கே நாளை அறிவியலே  துணை ஆகிவிட்டால்... அடக்கி ஆண்டு அடிமை படுத்தாதே திருத்திக் கொள் புனிதா திருந்தாத மனிதா மனிதனெனும் படைப்புமினி தொழிலாக மாறிவிட்டால் அக்காலம் எப்படியோ... இப்படியாய் வெடிக்கிறது  துடிக்கிற என் இதயமிங்கு. என்று எங்கு...

வேற்றுமையில் ஒற்றுமை

வெற்றுச் சாலையில்  சிலர் வேகமாய் ஓடினர் கையில் சிறு குச்சியுடன் வேகமாய் ஓட்டினர். வடிவத்தில் வேறானாலும் ஒற்றுமையின் இலக்கணத்தை  சீரான வேகத்தில்  சுழன்றோடிய விதத்தில்  ரோதை எனும் சக்கரத்தால் பாதை போகும் போதிலே சொல்லாமல் சொன்னார்கள்  மொழி  உயர  நிற  நாடோடு உடலாலும் பிரிந்தோற்கும் புரியும்படி.. தன் மேலேறி தனை உதைத்து தானும் கீழே விழுந்தாலும் தாங்கி பிடித்தும் தட்டி கொடுத்தும் பாசம் தருவாள் தாயைப் போலப்  புவியன்னை என...

பெண்ணிலல்ல உன்னில்

அடைய விரும்புவதை ஆழ்மனம் ரசிப்பதே காதல் பெண்ணில் அல்ல உன்னில் நாம் காமத்துக்கு அடிமை  இது காலகால கொடுமை  ஆலகால நஞ்ச-ருந்திய  இறைவன் வந்து சொன்னாலும்  திருந்தாதது இந்த இளமை. மோகமொரு யோகமென  வேகமுறு மாந்தருக்கு சோகமென சோர்வு தரும்  உணர்வுகளின் உள்ளாட்சி  சொல்லாட்சி செய்யும் உலகத்தில் சான்றோர் சொல் கேளாது செல்லும் சொற்ப கூட்டமது அற்பத்தனமாய் சுற்றம் பாராமல் சுற்றி திரிகிறது இன்பமிதுவென்று அன்றை கழிக்கிறது துன்பம் வரும்போது துடித்து தவிக்கிறது பருவத்தில் முளைக்குங் காதல் சோகத்தில் முடிந்தால் பக்குவமடையும் பாவத்தில் முடிந்தால் மூச்சினை முறிக்கும் உற்றவளுளம் புகுந்து உன்னுல கவளாகவும் அவளுலகு நீயாகவும் மாறினால் போதும். காலங்கள் கூட சொல்லலாம்  காதலில் கூட வெல்லலாம். அடைய விரும்புவதை ஆழ்மனம் ரசிப்பதே காதல் பெண்ணில் அல்ல உன்னில்.

நடுரோட்டு நள்ளிரவில்

நள்ளிரவு நேரம் நடுரோட்டில் நானும் மல்லாந்து படுத்தா  கண் பார்க்கும் வானம். தென்றல் தொட்டு போக  உடல் கொசு கடியால் நோக அந்த இதமான நேரத்திலும்  மனம் எதையோ தேடி போக. பகல் போல வெளிச்சம் தடிச்ச இடம் வலிச்சும் தல சாச்சி படுக்க  தரையில் இடம் கிடைச்சும் கண்ணுறங்க முடியாம  உடனெல்லோரும்  தவிச்சோம். குத்து பாட்டு கேட்டு  மனம் குதூகளிக்க அமைதியை அப்புறமனுப்பிப்  புலம்பியதென் மனம் வரிகளை எழுதி .

உறவால் குடும்பம்

ஆதியில் பிறக்கும் மனிதனுக்கு  வாழ்க்கை பாதியிலே தான் தொடங்குது மீதியை வாழ்ந்து முடித்தால் தானே வாழ்வும் முழுமை அடையுது கருவை காத்து சுமந்தவளுக்கும் பேறு பெருகையில் வேரொரு கைவிரல்  சுட்டிக் காட்டுதல் மட்டும் தானே தன்சேய் என்று எண்ணத் தூண்டும் தஞ்சேய்க்காய் அவள் பாசம் தந்தால் பாசத்துடனே பசிக்கு பாலும் தந்தே சேயின் மீது நேசம் காட்ட சேயும் உணருங்காலத் தாயும் ஆனால் தாயும் ஆனவள் தன் விரலாலே சுட்டி காட்டும் பொழு தொன்றதிலே உந்தன் தந்தை இவரே என்று  அவனுக் குணர்த்தக் காரணமாகலாம் அன்னை தந்தை பிள்ளை தொட்டு இவை யத்தனையும் சுட்டிக் காட்டும்  யாரோ ஒருவர்  நம்மாழ் மனதுள் நாமும் ஏற்க. ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நம்பிக்கை எனும் பேருணர்வாலே உருவாகிறது உறவால் குடும்பம்.

சாதி...

சாதிக்கும் வரை வாழ்பவரும் சாதிக்காய் வாழ்பவரும் சங்கமிக்கும் இச்சமூகத்தில் தலைமுறையின் தலைவிதியை  திருத்த எவரும் தேவையில்லை சாதிக்கும் நெறி உண்டு சாதனைக்கும் நெறி உண்டு . நெறி என்னும் பொதுவுடைமை தன்னுடைமையில் பொருத்தி பிறழாமல் வாழ்தலே பேரின்ப மென்றுணர்ந்திடில் சாதனை சரித்திரமாகிடலாம் நடைமுறையில் நல்லொழுக்கம் நாம் கடைபிடித்தே அடையாளம் சாதியெனும் அகந்தையதை மனதில் அடியோடு அழிப்போம் தரமாக வாழ்ந்து சமமான சமூகத்தில்   சண்டைகளை தவிர்த்து சாதனைகள் படைப்போம்.

சாளரம்

சாரல் வரும் வேளைகளில் சாளரத்து கம்பிகளில்  கண்ணத்தை வைத்தவுடன் கண் குறுகி பூரித்து விழித்திடும் குளிரால் உளங்குதூகளித்திடும்  கொட்டும் மழையை விடச் சொட்டாய் உதிர்ந்து கம்பிகளில் தொங்கும்  வடி நீர்த்துளி வரிசைகளை விரலாலே தடவி பக்கத்தார் உருவத்தில் பட்டென தெளித்து இப்படியே மாறி மாறி மாரியில் மகிழ்ந்திடுவோம் தாழிட்ட கதவுகளை  வெளி ஆள் யாரோ  தாளமிட்டுத் தட்ட யாரென குரலெழுப்பி சந்தேக பதட்டங்களை  விழி சன்னல் வழி காண தலை மட்டுங் காட்டி காதலே கேட்க கண்ட கண்ட சண்டைகளை  கண் மட்டும் பார்க்க தக்தொரு வடிவமைப்பே சாளரமாக்கிய ஆசாரி அவர் படைப்பே.

முடியிலல்ல முடிவில்

குழலற்ற தலையை கொஞ்சி குலவி தீண்டும் தென்றல் இதமாய் குளுமை தந்திடுதே மயிர் கோதிய விரல்களெல்லாம் தலை தடவும் பொழுதுகளில் முட்களென உணருகிறேன் மயிர் கால்கள் முளைப்பினிலே உயிரோடு இருக்கும் வரை உயரழகு என்பதெல்லாம் உயரத்தில் முடியாய் முளைக்கிறது உயர் முடிவெடுக்க முன்னோடி ஆகிறது அழகு முடியினில் மட்டுமல்ல முடிவுகளை நல்வழி முடிப்பதிலும் தான்.

இறப்பின் வெற்றி

கவலை கொள்ள தேவை அல்ல இழப்பு பெரிதல்ல  இருக்கும் பொழுது இருப்பை மறந்து அலைந்து திரிந்து இழந்த பிறகு நினைத்து தவித்து  மனம் வாட இல்லை அவரினி அன்புடன் நம்முடன் உறவாட இல்லாத போது  பொல்லாத சோகம் கொல்லாமல் கொல்லும் இறுதி காலத்தில் உறுதியாக நாமிருந்திருந்தால் இச்சூழலை மனமது வெல்லும் கவலையை கடந்து இயங்கிட தொடர்ந்து மனமும் துணியும் வாழ்க்கை புரியும் இறப்பே விடுதலை என்று இருப்பில் வெறுப்பு கொள்ளும் இறைவன் காலடி செல்ல பிறப்பை இறப்பு வெல்லும்...........

என் அப்பா

அரைகுறை ஆடையுடன் அங்குமிங்கும்  நான் அலைகையிலே அதட்டியவர் ஆடை உறுத்துதென அம்மனமாக கிடந்தார்  அப்போது உணர்ந்தேன் மரணம் மானப் பெரிதென ருசி பார்க்கும் பலருக்குள் உண்ணவியலா நேரம்  செவியை நா ஆக்கி ருசித்து ரசித்தவன் செத்து பிழைத்தோர் எத்தனை போரோ செத்து மடிந்தோர் எத்தனை பேரோ பலர் செத்துக்கொண்டே வாழ்பவரோ என செத்துக்கொண்டே உணர்த்தியவன் மரணத்தருவாயில் ஆசி செய் என கேட்கையிலே பெரு மூச்சு இழுத்து விட்டு  விண்ணுலகம் புறப்படவே  சொர்க்க ரதத்தில் சொகுசாக பயணித்து சுடுகாட்டு சூட்டில் விண்நோக்கி சென்றான் என் நெஞ்சாங் கூட்டில் நினைவாக நின்றான்.

கருவெண்மை (black and white)

வண்ணமில்லா காலம் அழகை அறியவியலா மாந்தர்கள்! அழகு காலை எது ? அந்தி மாலை எது ? நிறங்கள் பிரசவிக்கவில்லையோ ! சாம்பல் வண்ண சான்றுகளாய்  காட்சி தரும் படங்களினை! கண்களில் பூட்டி வைத்து  காலத்தை பின்சுழற்ற கற்பனையில் காவியமாய்! எங்கெங்கு பார்த்தாலும் கருவெண்மை ஓவிய காட்சி  மனமோ செய்கிறது எண்ணங்களால் வண்ணங்களில் ஆராய்ச்சி !! பகலவனும் பகலற்ற பொழுதுகளில்  பகலவனிடம் கதிர் திருடி எதிரொளித்திடும் மதி மாலை என எல்லாமும் கரு வெண்மை நிறமாக வடிவுள்ள வானவில்லுக்கு கடந்த கால காட்சிகளில் அழகூட்டும் வண்ணமே  முகவரிக்காய் கருவெண்மையின் கருவுக்குள்  மரகத பச்சையுடன்,  மாணிக்க, மஞ்சள், நீலமாம், இளங் கதிரொளியென எல்லாமும் அதனூடே இளைப்பாற குடிபுகுந் திருக்குமோ! இப்படிக்கு வண்ண நிழற்படங்கள் கூறும் கருவெண்மையின் கருச் சுமை.

இருள் தேர் இழுப்போம்

இருள் வரும் போதெல்லாம் எனக்கான உலகம் பிறக்கிறது காரிருளுள் தான் எனக்கான பேரருள் கிடைக்கிறது  நாளெல்லாம் இசை கேட்கிறேன் இரவோடு இசை தரும் இனிமை நிழலோடு விளையாடும் பிள்ளை ன் களிப்புக்கான உழைப்பின் மகிழ்வு இருளில் தொடங்கும் தொடரிப் பயணமும் எதிரில் மோதும் போர் காற்றும் இசையாகி செய்யும் இம்சைகளோடு மெல்லிசை கேட்கும் போதெல்லாம் மனமும் மேன்மை அடைகிறது  தினமும் இதற்காய் அலைய தவிக்கிறது. இருளில் இருக்கும் சுகந்தத்திற்காய் பகலில் பாராருடன் பல போராட்டத்துடன்  நாளை நகர்த்திச் செல்வது  இருளெனும் தேரை இழுக்கவும் ரசிக்கவுமே.

மாய உலகம்

தனித்து வாழ விரும்பும் நானே  குடும்பங்களை பார்த்ததும் குதூகளிக்கிறேன் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறேன் இச்சை கொள்கையில் இளித்து சிரிக்கிறேன் நான் பேருக்கு மனிதன்  ஆனால் யாருக்கு கடவுள் இணைப்பது காதல்  முடிப்பது மணம் இனம் பெருக காமம் அதில் நான்  கருமுட்டையின் உரு விந்து நீரால் வந்த வசித்திரம் மனம் அருந்தால் மனிதம் மனமுருகக் கடவுள்  ஏனிந்த பிறப்பு ? வாழ ஆசை இல்லாதவனுக்கு  ஏன் வாழை இலையில் வகைவகை உணவோ ஏதோவென்று எடுத்து ருசித்தால் எல்லாம் வேண்டும் என்றிடும் ஆசை வேண்டவுமில்லை வெறுக்கவுமில்லை முடிந்தால் போதும் இப்பிறப்பின் எல்லை.

உவகை

உவகை நிறைந்த உலகம் உலகில் உயிர்கள் உலவி பறக்கும் பறக்க துடிக்க எண்ணும் மனமே  மனமகிழ்வைத் தேடி திரியும் மணக்கும் மல்லிகை இருக்கும் இருந்தும் மணக்க மறக்கும் மறந்து போகும் மனித மனங்கள்  மனமலைந்து அழிந்து போகும் நிராகரித்து நம்மை நிதானபடுத்த நிதானமற்ற மனிதர்களின் வார்த்தை வார்த்தை குறைத்து மனதில் மனவலிமை ஊட்டிச் செல்லும் வலிகள் வர வழியும் நீர் விழியில் விழியும் விரித்து களிக்கும் ஒரு நொடியில்  நொடி தான் நொடிக்கும் நொடிக்குள் மனமது மறக்கும் மறந்து எல்லாம் வல்லவனை நினைக்கையிலே.

சத்திரம் பேசுதடி

கதிர் மறைந்த போது  நீலம் படர்ந்த வானில்  ஒளிர துவங்கும் மதியுடன் மேகமற்ற வானமாய் தோன்றும் சில நேரத்தில்  வெடித்து சிதறும்  மனமுடைய மனிதர்க்கு மாலையாகும் வேளையில் குளுமை தரும் வளியுடன் வலி மறக்க வைத்திடும். அங்குமிங்குமாக  ஒளிர்ந்து மறைந்து விளையாடும் சுற்றி இருள் சூழத் துவங்க  ஒளிரும் மின்மனி விளக்காய்  ஆங்காங்கே பிறக்கும் அவை அந்தரத்தில் மிதக்கும் சில நகர்ந்து கொண்டே இருக்கும் இதனோடு இணைந்தவனை நகரவிடாமல் வசமிழுக்கும். புரியாத புதிர் தொடுக்கும்  வான வெளி சத்திரத்தில்  நட்சத்திரம் சிரிக்கும்  பூமி வாழும் மனித கூட்டம் வானம் பார்த்து வியக்கும் சிதறிய வின்மீன்கள் எல்லாமும் சிந்தனையை கொடுக்கும் வீழும் சூழலிலும் மிதக்க - ஆசானாகும்  நாமதனிடம் அன்போடு கற்க.

என்னவென்று சொல்வதென்னை

எத்தனையோ ஆசைகள்  சித்தத்தில் உதிக்கிறது  எண்ணாமல் இருக்கத் தான் என் மனமும் நினைக்கிறது என்ன செய்வதென  தெரியாமல் தவிக்கிறது ஏதேதோ ஆசைகள்  இம்சைகள் செய்கிறது கண்மூடி  என்னை நான் காணுகையில் நான் என்பவன்  நீண்டு நெடுகிடையாகிய குப்பை உயிர் பூதங்கள் இருப்பதால்  நான் மனிதப் பொறிகளின் தொகை இதே உணர்வோடு வாழ நினைக்கிற பித்தன் சில நொடிகளில் வாழ்ந்து பார்த்திடும் சித்தன் நான் அந்த பரமன் வாழ்த்திய பக்தன் இப்பிறப்பில் அவன் பாதம் பணிந்திடில் முக்தன்.

அப்பா அன்பே உனக்கு

சிந்தாதிரி பேட்டையில அடுக்குமாடி கோட்டையில சிகிச்சைகாக வந்தவங்க  சினேகிதமாகி போனாங்க எது எங்க எப்படி நடக்கும் தெரியாதே அவனோட கணக்கும் ஆனாலும் உனக்கும் எனக்கும்  ஏதோவொரு தொடர்பது இருக்கும் பத்து திங்கள் சுமந்தவளின்  பாசத்திற் குரியவனே இருதிங்கள் மட்டும் தான்  உனக்காக உடனிருந்தேன் சிரித்த பல நாள்கள் சண்டையிட்ட சில நாள்கள் அன்பை பகிர்ந்த  அழகான நாள்களவை பழக்கம் ஒன்று நீ கொள்ள  பழிவாங்க உன் உயிர் கொல்ல உருவெடுத்த உயிர் கொல்லி உணவை தடுத்து உயிரை குடிக்குது.. உனக்கு பிள்ளையாய் நான் பிறந்திடவே எந்த பிறப்பில் யான் செய்த தவமோ என் அப்பா உனக்கு  என் அன்பே உனக்கு.

துடிப்பும் தவிப்பும்

இதயமனியின் இனிய ஓசை  கதறும் ஆசையின்  கனிந்த மொழியா உருண்டை தலைக்குள் புரளும் எண்ணம் புயலில் பறக்கும் புழுதித் துளியா விழிக்கும் செவிக்கும் இணைக்கும் அமைப்பது  நினைக்க மொழிக்க உதவிடுமா தலையில் தொடங்கி தரையில் முடிய தினமும் பயணம் தொடர்ந்திடுமா  கரையில் அடங்கி காற்றில் கலந்து உயிரும் ஊசல் ஆடிடுமா

என் பாரதி

புதுமையான பாரதத் தமிழ்  புகழோடு தோன்றிட, மாண்புடைய பெரு மொழியினத்தை, மண்டியிட வைத்தோரை, எம்மிணத்திற்காய் பிறந்தே னென, எட்டயபுரத்தி லுதித்தவனே ! கவி ஆனான் உலகுக்கு,  பிரசுர எழுத்தில் தன் கருத்தால், விடையானான் எதிரிக்கு. அறிந்திருப்ப ரெவமுண்டு,  எதிரிகளை அவங்காலெட்டி, உதைக்குமொப்ப அவன் வார்த்தைளால், விடுதலைக்கு விழித் தெழுந்த இணம், தன்மானங்கொண் டெழுங்காலம் வரை. ஆண்டவ னுள்ளதை அவனுரைத்தான், மனிதனியற்றிய மூட நம்பிக்கைதனை வேரறுத்தே. செல்விகளை, திருமதிகளை வீர பெண்களாய்,  பாரினில் அவன் (உரு)வாக்கி வைத்தான்,  ஆணுக் கழகையும் எடுத்துரைத்தான். போர்குணத் தொடு விஞ்ஞானமும், கற்பனை கன்னம்மா வொடு மெய்ஞானமும். தன்னுலகு, தன்னாடு, தன் மக்களென்றும்,  பாஞ்சாலியொடு, புதுமைப் பெண் தந்த பாரதி நீ, கவி வழியே நயம்பாடி, நாடு வாழ வீடு காத்த வீரவன்.

மனைவிக்கான வெற்றிடம்

அவள் ஒரு பேரழகி அதனால் தான்  இதயத்தை கொலை செய்ய  போர் செய்கிறாள். அவளின் மாய விழிகள் இந்த காய உடலில்  காயம் செய்வதை எப்படி சொல்வேன்.  அவளுக்கு சுவாசமாகும்  காற்றாய் மாற காத்திருக்கிறேன். கடவுளின் காலடியிடம் கிடைக்கும் வரை உன் காதலனாய் என் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறேன். இப்படிக்கு முறையிடும்  மனைவிக்கான வெற்றிடம்.

உயிரை உயர்த்தி பிடித்திடுவான்

அடங்கிட மறுக்கிறேன் தொடங்கிட நினைக்கின்றேன் மடிந்திட போகிற காலத்துல  விடிகிற இருளுக்குள்  முடிகிற வாழ்க்கைய அறிகிற எண்ணம் யாருக்குமில்ல தொடருர பாதையில்  நடக்குற கால்கள்  நகருரு ஊர்களை நினைப்பதில்ல இறுதி வரைக்கும்  பயண மிருக்கும் இலக்குகள் மட்டும் முடிவதில்ல இங்க‌ எத்தனை நாடு  எத்தனை வீடு  கடைசியில் எல்லோருக்கும் சுடுகாடு அத்தனை பேரும் அன்பாய் வாழ  மயிரை அழகாய் திருத்தும் மனிதன் மனதை திருத்தி வாழ்வானாயின் உயிரை உயர்த்தி பிடித்திடுவான் 

கர்மத்தால் முக்தி

கர்மத்தால் பிறக்க  கர்ப்பத்தில் உயிர்கள் உதிக்கின்றன. அது சொர்க்கத்தை அடைய  மரணத்தின் வரையும்  படாத பெரும்பாடு படுகின்றன. உயிருக்குள் ஆத்மா  உலகில் உலாவி  மயிர் கொண்ட உடலோடு அலைகின்றன. மனமெனும் மாய வலை கொண்ட மாந்தர் வசமீர்க்கச் செய்யும் - செயல்களில் வழுக்கி விழுகின்றன. மான அவமானமின்றி இணமானத்திற் கிழுக்கு தந்து தன்மான‌ மில்லாமல் சன்மான மெதிர் பார்த்து சங்கடம் தரும் செயல்கள் பல செய்ய, சிலரின் சில செயல்பாடு உளத்தில் நல்லன்போடு உயிரும், உடலுறுப்பும் உள்ளது, நல்லது செய்திட வென்றறிந்து, செயலாற்றும் மனிதம் புனிதமே. கருவான கர்மம் பிறந்து புனிதத்தால் கடையென முக்தி யடையட்டும்.

மனமது இதயத்தின் மறு உருவோ

சொல்லாத சுகங்கள் என்னை பொல்லாத மிருகமாக்குது , துள்ளாத வயதும் கூட  துணிவோடு எகிரி குதிக்குது. இல்லாத இன்பமதை தினம் இருட்டுக்குள் மிரட்டித் தேடுது , ஆறடி போகும் உடலுமிங்கு யாருக்காய் அது ஏங்கி தவிக்குது. நாளு வாசலில் நாளும் துடிக்குது ரத்த நாளங்களை சுத்திகரிக்குது , கையளவுள்ள இதயம் ஒன்றோ காயக் காற்றை கையாள்கிறது. மனமெனு மங்கம் இல்லா போதும், உணர்வாய் மாறி உயிரை வதைக்குது. வாழ்வில் பாசம் வைத்து ஏமாறுவதில், பாடாய் பட்டுப் பைத்திய மாகுது. வைத்தியம் பார்த்திட பெண்ணை தேடுது, மருந்தாகும் காதல் மகத்துவ மானது. மனமது இதயத்தின் மறு உருவோ , இது உயர் சிறப்புடைய நற்பிறப்போ !

செம்மொழித் தமிழ்

ஓசைக்கு வடிவாகி உயிருக்குள் உறவாடும், வார்த்தைக்கு வயதறிய முடியாமல் தடுமாறும், வளம் பெற்று என்னில் வகுக்கவியலா, எண்ணத்து ஊற்று எங்கும் பரவிருக்கும். கலைகளின் உடல் மொழிக்கும், கலைஞனின் வாய் மொழிக்கும், வள்ளுநர் வகுத்த அமைப்பை ஒத்த இலக்கிய வரலாறுகளிங் கிருக்கும். மரித்து போகும் மனித இனத்தில் , மலர்ந்து கொண்டே மருவி வாழும், மரபில் மாற்ற மேதுமின்றி, தாய்மை உணர்வில் தரம் காணும். காலம் போல தனித் தியங்கும், தன்னை தாய் மொழியாகக் கொண்டோரை, தன் வளத்தால் அவ்வினத்தை இயக்கிவிடும், கலப்பின்றி களம் கண்டு  காலத்தில் வென்று விடும். பாட மறியாதவர்க்கு  பட்டறிவு தரும் பாடம், பல மொழிகள் இருக்கையிலே, வழி நடத்தும் புது மொழியாகி, எதிர்கால தலைமுறைக்கு  எடுத்துரைக்கு மன்றைய பழமொழியாகும் நடுநிலைமை தன்மை யுண்டு , கலையோடு இணைந்து காலப் பெட்டகத்தில்  சுவடு மாறா சுவையோடு, எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுவதை , வின்னும் மண்ணும் வியந்து பார்க்கும், விஞ்ஞானம் சிறந்து , இத்தனை சிறப்புடன் செழித்திருக்கும், தமிழுக்கு தரணியில் தனிப்புகழுண்டு செம்மொழி என்னும் சிறப்புண்டு.

தனிமை வேண்டும்

தாகம் தீர  மோகம் மாற  ஞானம் ஊற  தனிமை வேண்டும் உறவை தாண்டி  உணர்வை அறிய  உள்ளம் தெளிய  தனிமை வேண்டும் தன்னை மறந்து  உயரே பறந்து ஓய்வின்றி திரிந்து  உலகம் சுற்ற  தனிமை வேண்டும் சுகத்தை அடக்க சுயத்தை சிதைக்க மனிதம் சிறக்க மதத்தை மறக்க சினத்தை இழக்க தனிமை வேண்டும்  அனைத்தும் அழிக்க கர்மம் கழித்து சிவத்தை நினைக்க  தனிமை வேண்டும்.

ஒழுக்கம்

இனிமை இதுவென தெரியாத வரையில் எதுவும் எதுவரையென  யாரு மறியாததால். இந்த சுயநல உலகம் செய்யும் பொது நலங்களில் கலகம் மக்கள் மனங்களை மறந்து செயல்படவா கழகம். அனங் கவளழகும் அதை காட் டிடுமவள் திலகம், அவள் கணவனின் உலகம் தாய்மையில் அவள் மனமிளகும். கொடுமைகள் நடக்கும், அவதிகள் பிறக்கும், முடிவுகள் எடுக்கத் தவறிடும் அரசில் , குடிக்குள் பல  குழப்பங்கள் வெடிக்கும். விதியினை‍ மதியது வென்றிடுமாம்! விதியது எதுவென தெரியாததுவே, மதியதை மனமது மதியாததால் , இப்படியோரிடர் இருப்பதினாலதை , வென்றிட தானந்த தவவலிமை எண்ணச் செயலை ஒழுங்காக்கும், அதிலெல்லா செயலும் சரியாகும், சரியாய் வாழ்வது யாவருக்கும் , எப்போதும் எங்கும் நலமாகும்

அனுபவிக்க தவறாதீர், ஒன்றிலடக்கி ஒடுங்காதீர்

காலம் முழுதும் வாழ்ந்தாலும் காதலின் அர்த்தம் தெரியாது, உள்ளுணர்வை உணரத் தெரியாமல்  உலகே விடிந்து கிடந்தாலும், விடை தேடும் இருளாய் உலகிருக்கும். உறவுக்குள் வருமுரை யாடலெல்லாம், குத்திக் காட்டுவதாக எண்ணிடுவாய். புத்தி, செயல் குணமென எதிலும் தடுமாறிடுவாய். ஆசைகளை தட்டி எழுப்பிவிடும் அதை மனங் காதலுக்குள்ளே புகுத்திவிடும் , புதைத்தது புத்துயிர் பெறவே  எதிர் பாலின ஈர்ப்பை  பெரிதாய் எதிர் பார்க்கும். ஆசைக்கும், இச்சைக்கும் தேவைக்கும், தேடற்கும் ஊடல், உறவுத் துறவுகளுக் கிடை  இடிபட்டு , ஊரார் வார்த்தைகளில்  சிக்கி சிதைபட்டு , உடலுக்கும் உணர்வுக்கும்  நடுவில் நடக்கும் பெரும் போரோ ! இல்லை இந்த உலகங் கொண்டாடும்  பாலினக் காதற் கோட்பாடோ ? காதல் ஒரு வித  புது வித உணர்வு புதிரான வாழ்வில்  புதிதாய் பிறக்கும் தெளிவு  அதை அனுபவிக்க தவறாதீர் ஒன்றில் அடக்கி வைத்து ஒடுங்காதீர்.

ஊன்று கோலின்றி நில்லுன் காலில்.

தடம் மாறித் தடுமாறும் பொழுது தடையாக அதையும் கருது தளர்வில்லா தெளிவாய் நடக்க நிச்சயம் வசமாகும் வெற்றி நமது. இடம் இன்றி வாழ்ந்தாலும் இணமின்றி போனாலும்  வலியின்றி வாழ்வேது  வலிமையது வழிகாட்டும் ‌‌வரலாறும் பறைசாற்றும்‌.‌‌‍‌‌ நித்தம் உனக்கொரு  யுத்தம் வருவதை போலுணரும்  நெஞ்சதனில் வித்திட்டு உழைப்பெனும் உரமிட்டு ஊன்று கோல்  இன்றி நில் உன் காலில். ஊக்கம் குறைந்தாலும்  ஏக்கம் நிறைந்தாலும்  தாக்கம் மாறாது காக்கும் கடவுளவனுண்டு முயற்சியின் வடிவில் அவனது அருளுண்டு.

விதி

பயணம் முடிய  பாதை இணைத்திடும்   நம் வாழ்க்கை முடியும் வரை  புதுப் புது நட்பு கிடைப்பது போல். ‌‌ பயணம் செல்லும்  வாகனம் போல நாம் இலக்குடன் சேர்ந்துப் புகழடைய குறிக்கோள் வாகனச் சவாரி செய்வோம். வழிகாட்டி வழிநடக்க  வில் அம்பே நல்லவழி வழிகாட்டும் வில்லே வளைந்தாலும் - அம்பாய் வில்லின் குறி அடையச் சீரிப் பாய்ந்திடனும். வேகம் எனும் வார்த்தைக்கு  வடிவரிய வேண்டுமெனில்  ஒளியை பார்த்தறிந்து  ஓயாமல் உழைத்திடனும். வாழ்க்கை எனும் வாகனத்தில்  விதியின் வழிப் பயணத்தில் நம் செய் வினைகள் நமக்காக - வழிகாட்டி  நம்மை திசை மாற்றுகிறான் அதனால் தான் விதியவன் தன்னை இறைவனெனப் பறை சாற்றுகிறான்.

கண்டாலே கூறிடுவேன் இறைவனவன் எவனென்று

பரந்த உலகம்  விரிந்து கிடக்குதே, விழுந்த விதையை பயிர் செய்வோம், ஆனந்த கண்ணீர் துளியில் அழகிய நந்த வனமமைப்போமே ! மரஞ்செடி கொடியோ ! மனமயக்கும் மலர் வனமோ ! மூலிகை தாவரமோ ! உணவு வகை தானியமோ ! ருசியாலே பசி தீர்க்கும் , மருந்தாகி வாழவைக்கும். மலராகி போவதிலே, இறைவனுக்கும், இறுதிக்கும், இப்பிறப்பை அர்ப்பணிக்கும். எத்தனை அழகு , இது யார் செய்த உலகு ! ஆயுளை அளித்தும், அழித்துமதில் விளையாடும், ஆற்றல் உடையவன் எவனோ, அழியும் உலகில்  நடக்கும் நிகழ்விதை, நித்தம் அழிவறியா ரசிப்பவனை  காணத் தான் வழியுமுன்டோ ? கண்டாலே கூறிடுவேன்  இறைவனவன் என்னென்று.

எங்கே போகுதோ வாழ்க்கை

என்னடா வாழ்க்கை இது?  எண்ணிப் பார்க்கும்போது அது  சித்திரமா, விசித்திரம் போல் நெஞ்சுக்குள்ள நிற்கிறது பல வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியமோ இல்லை உறவுகளால் ஒன்றிணைந்த காவியமோ சிலை வடித்திடும் சிற்பி உளியாகிடுமோ சிதைத்து விட்டு செத்தவுடன் வித்தாக்கி போகிடுமோ கடமையில் உடைமை  உரிமையில் மடமை  வளமை தருமந்த வலிமை  அதில் எளிமை தானே இந்த இனிமை தனிமை எனும் வரம்  வரும் வரை வளமதை மனமது பெரிதென  மதியினில் விதைத்திடும். உதயத்தி லிருந்திடும் சூரியன் மறைவினில் எங்கோ போகிறது அதுபோல் தெளியா மனமும் திரிந்தலைந்து‌ நிலையெது என்பதை நினைத்து வாழ்வை வாழ்ந்து முடித்து மடந்திட செய்கிறதே.

' மண் புழுவின் நண்பனுக்கு ' ' மண்ணுல பல தொல்ல '

வாடுது உசுறு நிலத்துலையும்  உழவனுருவில் நிசத்துலயும் கேடு நோக்கி ஓடும் இந்த பாரில் உள்ள நாடும் அன்று விவசாயம் அரசாங்கத் தொழிலாக மாறும்  அந்த காலம் வெகு தூரம் இல்லை  அதை எண்ணி உழைப்போமே நாளும். ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே கல்யாணம் அத விட்டு சொத்துதனை தேடுகிறான் நாளும் நில மழிஞ்சு நாடாகும் அந்த ஒரு காலம் அது விளைநிலத்தின் சுடுகாட்டில் நாம் வாழம் அலங்கோலம். விளை நிலத்தை விலை நிலமாக்க  திட்டம் போடுறீங்க மரங்செடி கொடியாக விதையால வெளிவருங் செயலுக்கு  உழவெனும் பெயர மறந்து போகுறீங்க உழவனை உதரித் தள்ளுறீங்க வடிகாலும் வடிநீர் பாசனத்தையும் - அமைக்க  இங்க யாரு முன் வரீங்க. ஏர் டிராக்டரான பின்னும் ஏற்றமிங்க இல்ல மண் புழுவின் நண்பனுக்கு மண்ணுல பல தொல்ல  இதை எல்லாம் தாண்டி நான் என்ன சொல்ல நானும் உங்களில் ஒருவன் ஆனாலும் வரும் வார்த்தையை கொல்ல மனம் இல்ல.

இருளென்ப ஒளியே ஒளியென்ப இருளே

 தெரியும் நீல வானம் அதன் பின்னே உள்ளயாவும் தெரியாது மறைந்து போகும். பச்சோந்தி நிறம் மாறும்  இந்த விண்ணும் நிறம் மாறுமோ என்ன, என்றாலு மிது  அதிசயத்தின் உச்சமென ஆகுமோ ஆவியாகும் நீர் கூட சாம்பல் மேகமாகுது காலை மாலை இளங்கதிரும் வானை சிவப்பாக்குது வானுக்கும் மானமுண்டு அதை தெரிவிக்க மேகமுண்டு இருளுக்கு விடையாகி விடியலிங்கு வந்தாலும் ஒளி வீசுங்கதிராலே கொல்லாமல் சுட்டாலும் இருளையும் ஒளியையும் புகழ்பாடி தீர்தாலும் அவ் விரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகி நமை‌ முட்டா ளாக்கி விடும்  கதிரவனின் பின்புறத்தே  ஒளியுண்டோ தெரியவில்லை  கதிரவனே நெருங்க விரும்பும் காதலெது புரியவில்லை பேரொளிக் குள்ளும் இருளுண்டு  காரிருளுக்கும் சிறு ஒளி உண்டு  வெற்றுக்கண் சூரிய காட்சி சுற்றெல்லாம் இருளாக்கும் சுற்றிருள் பழகும் விழிகளுக்கு  சிறிதளவேனும் ஓர்  ஒளி கிடைக்கும். இருளென்ப ஒளியே ஒளியென்ப இருளே

வாழுவோம்

வெளுத்த நிறத்தில் சிறுத்த இதழ் வழி சிரித்தவளே கருத்த குழலினை  அவிழ்த்து என்னை  அதன் வழி அலைபாய விட்டவளே. மூடிய இமைக்குள் உருட்டிய விழியில் என்னை புரட்டி போட்டவளே கை குலுக்கி சிரிக்கும் வேளையிலே  என் ஆயுள் ரேகை ஆனவளே அடர் இருளில் புகழ் தேடும்  ஆயிரம் விண்மீனிருந்து என்ன பயன்  முழு மதி இல்லா நேரத்திலும் பிறை மதியினை, ஓதும்  புகழது போதுமல்லோ அது போல் இவளெனக் காகிடுவாள். பகலவனின் பார்வையிலே  பயந்துருகும் பனித் துளியாய் அவ்வினிமை அவள் தரவே  காற்று தீண்டும் சோலை  அந்த கடற்கரையில் அந்தி மாலை  அன்று தூது போனதந்த நாரை  இங்கே அலை மோதும் பாறை  பெண் மேலும் காதலுண்டு மண் மேலும் காதலுண்டு இறை மீதும் காதலுண்டு இவ்வுலகில் நீண்டு வாழ ஆசை உண்டு ஆசையெல்லாம் நிறைவேறாது அதானால் தான் ஆசை கொள்கிறேன் நிராசை என்னை நிதானபடுத்துமென்றே நினைத்து வாழ்கிறேன்  நிரந்தர நிம்மதி தரும் வாழ்வை வேண்டி.

ஈஸ்வரா

ஆதி சிவனானவன்  பாதி உடல் தந்தவன் எங்கும் தவமானவன் கங்கை தலை கொண்டவன் தில்லையில்  நடராஜனாய் ஆடினான் நல்லூரில்  நிற மைந்தாகினான் கீழ்வேளூரின்  மேலமர்ந்த அக்ஷய லிங்கமாகினான் பரமத்துவம் வாய்ந்ததால் பரமாத்மாவாகினான். ஆண்டவன் ஆன போதும்  ஆயிரமாயிர லீலைக்காக  யுகந்தோரும் பிறக்கிறான்  பிறப்பு இறப்பு அற்றவன் புட்டுக்கு‌ மண்சுமந்தான் மனமுருகி பூசை செய்த  பூசலாருக்கவன் தெரிந்தான் பூதங்களில் அவன் கலந்தான்  பூவுலகில் நீக்கமற அவன் நிறைந்தான் சாட்சிநாதனாய் எனக்குள் மன காட்சி தருபவன்.

நான் நானே

நா‌ன் யார் என்பதற்கான  தீர்மானத்தை நீங்கள்  எப்படி எடுப்பீர் . உங்கள் கண்ணும் உங்கள் காதும்  உங்கள் வாயும் உங்கள் சிந்தையும்  தரு மடையாளத்தை எனக்கு எப்படி கொடுப்பீர் நான் கருவில் ஒரு உயிர் பிறந்ததும் ஒரு உடல்  என் அங்கத் தொகுப்பழைக்க பெயர்  கல்வி காலத்தது படிப்பு  பொருளீட்டும் தொழில்  சூழலை அணுகுமென் கருத்து குடும்பத்தில் உறவு இல்லறத்தில் பண்பு  பேறுற்றால் பெற்றோ னெனுங்கடமை மரணத்தில் நானென்பதை யார் சொல்லுவார் அந்த இறைவன் முன் அவன் தந்த விதிவிட்டு யார் விலகுவார். இவை உணர்ந்து  இவ்வுலகுலாவிடும் நான் நானே......

அவளன்பழகன்

யாரோ எனை விட்டெரிந்த போது புதைந்திருந்தேன் விதையாய் முளைத்தேன் சிறு துளிராய் நான் வளர காதலெனும் நீர் பாய்ச்சினால் அன்பிலே..... காதல்  ஒரு வித அனுபவம்  அதில் காலம்  கண பொழுதினில் எனை மாற்றும் உயிரே.... என் மனமது உனை எண்ண நினைவுகள் வந்தென்ன நிஜம் தரும் சுகத்திற்கிணை  ஆகுமோ.... கைவிரல் மேலுள்ள  சில மயிர்கள் மட்டும் மெல்ல அவளை தொட்டுணர்வு கொள்ள அந்த சுகம் தந்த கணம் மீண்டும் நேருமோ..... வண்ண பூக்கள் தோட்டம் வந்தாளவள் பிறை நிலவாட்டம் மெலிந்த உடலில் நெளிந்து வந்தாள்  அன்பை பொழிந்து என்னை  அவளன்பழகன் ஆக்கிக் கொண்டாளே..........

கண்

வாய்மொழி ஆயிரம் கதைத்தாலும் விழித்திரை விடாது படமெடுக்கும். சட்டென பார்க்கும் போது அந்த பார்வை  ஒரு பாவை அவள் பார்வை  புது பிறவி தரும். விரும்பா பேச்சுக்கு இமை விரிக்கும் முறைத்தலில் பதிலுரைக்கும். இதழ் சிரிக்கா  சில நேரம் இமை சிரிக்கும்‌ . புருவத்து புதிராகி பருவத்து புதிர்களில் பக்குவமாய் பயணிக்கும். மனக் குரலின்  மாய வடிவம் காய உடலில்  கண் காணும் கனவே. அங்குலத்து வெண் குளத்தில் அங்குமிங்கும் அலைகிறது மயிர் கரைகள் மூடுகையில் உடலின் புதையலென புல படுகிறது. ஒளியை விட கடந்தூடுருவும்  கையும் மெய்யும் தீண்டும் முன்  விழிகள் தீண்டும் அந்நிலையில் தீண்டாமை விரோதத்திற்கு தீர்ப்பளிக்கும் நீதிமானே.

குமரிக்கடல்

அலைமோதும் பாறையின் மீது சிலையாக நான் அமர்ந்திடவே மூன்று கடல் கூடும் இடம்  அதில் நெஞ்சம் மட்டும்  தன்னை மறந்து லயிக்கிறதே இயற்கையில் கணங்கள் கலந்து கவிக்கிறதே வானுயர்ந்த வள்ளுவனை வந்தடைந்தேன் அவர் காலடியில் குறளின் வரிகளில் வாழும் குரலுக்கு வடிவம் கண்ட பேருவகை இப்பேருலகில். வங்கமும் அரபியும் சங்கமிக்க  அதை எதிரொலித்து  இந்திய பெருங்கடல் கூச்சலிடும் அது வீரத்துறவியின் காலை ஆரத்தழுவிவிடும்  இயற்கையின் தாய் மொழி தெரியவில்லை அதன் முது மொழியும் புரியவில்லை புது உரை பல அவள் தருகின்றாள் அதன் பொருளை புத்திக்குள் விதைக்கின்றாள் வானொடு வளியும் நீரும்  இந்த ஆளொடு மனதின் ஆழம் ஆளும் நாளும் இங்கே வர ஆவல் கூடும் கடல் தொட்டு கரை வீசும்  அந்தத் தென்றலின் இசையை மீண்டும் மீண்டும் கேட்கும்.

காதலில் காதல்

சிலர் என்னை தவறாய் எண்ண நீ மட்டும் ஏன் தவமாய் ஏற்றாய். வலிக்கும் போதெல்லாம்  வாழ்க்கை வழித்துணையாவது அவளன்பால் தடுக்கி விழுகையில்  தாங்கி பிடிப்பவளே‌. மீசையை முறுக்கிவிட்டே  எனக்கு மயக்கம் கொடுப்பவளே விரல்களை கோர்த்து  விடைகளை தந்தவளே. விழி மோதி காயமுற்ற இதயத்தில் காதல் மருந்தானவளே பூவிதழ் போன்ற உன் இதழ்களினால் என் இதழொரு பூலோகத்தை படைத்தவளே. பைத்தியம் பிடித்த என்னுள்ளே  காதல் பக்தி விதைத்தவளே பட்டு போன செடியில் கூட பட்டாம்பூச்சி அமர்ந்திடுமோ. கார்குழலாடும் பேரழகி  அவள் கருப்பு நிறத்தொரு கட்டழகி வட்ட நிலவதும் பொலிவிழக்க அன்பை பொழிந் திவள் அழகானாள். சரிகமபதநி தெரியவில்லை அவளின் சிதறிய சிரிப்பினிலே அபூர்வ ராகமது மௌன ராகமெனில் அதற்கொரு கீதமாவ தவள் இதழ்கள் தான்.

ஆசை யாரை விட்டது

உழைக்க தான் ஆசை ஆடம்பரத்திற்காய் அல்ல அடிபணிந்தும் அல்ல அத்தியாவசியத்திற்காய் படிக்க தான் ஆசை பட்டங்களுக்காய் அல்ல பணிகளுக்காய் அல்ல பட்டறிவு, பாடத்தின் பேதம் தெளிவு கொள்ள சேவை செய்ய ஆசை  ஒற்றுமைக்காய் அல்ல வேற்றுமையை வேரறுக்க அல்ல, என் தவறை திருத்தி கொள்ள உணர்ந்து கொள்ள ஆசை உறவை பற்றி அல்ல உரிமை பற்றி அல்ல உலகு பற்றியும்  மனிதம் பற்றியும் இவை தாண்டி  நான் அறிந்த அந்த புனிதமான இறைவனை கண்டு கொள்ள .

என்ன நினைக்கிறாளோ

என்ன நினைக்கிறாளோ இல்லை என்னை நினைக்கிறாளோ வெண் வண்ண நிலவை போல என் கண்ணை கவர்கிறாளோ வீட்டின் தின்னை  காற்று  இதயத்தில் என்னை துளைத்து வீச தீடீரென கேட்டேன்   அங்கே அவளும் காதல் மொழிகள் பேச நாணல் வலை போல் புருவம் அதில் மாட்டிய மீண்களாக கண்கள்  இறை தேடி திரியும் அவள் விழி  என் விழிக் கிறையானதென்ன கத்தி இன்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்கிறாள் அறிகுறி யாலவள் இதயத்தை என் இதயத்தில் தைக்கிறாள். இருப்பது ஒரு வாழ்க்கை என்று எனக்குணர்தி சென்றவள் உணரவே இல்லையோ என் வாழ்க்கையின் தொடர் கதையினை.

லைஃப்

உறவு முடிந்துவிட்டதோ மறந்து விட்டதோ இருப்பினும் கடந்து செல்ல பழகு நினைவுகள் இழந்து விட்டதோ அழிந்து விட்டதோ இருப்பினும்  தொடர்ந்து இயங்க பழகு வாழ்க்கை என்னும் ஒருவழி பாதை  அதில் முந்தி செல்லவே முடியும் எத்தனையோ உறவு வரும்  அத்தனையும் வழிப் போக்கனை போல் நல்வழி சொல்வார் நம் நினைவகலார் நின்று விடும் பயணம் தான்  இருப்பினும் இறுதி வரை  நிலையான துணை என வருபவர் எவருமில்லை.

ரசனை

கோடி கண் கொண்ட இரவினிலே ஒற்றை விழியின் பளிங்கொளி  -  நிலவு தொடுவதிலே நுறை தள்ளும் தொட்டணைக்க கரை துள்ளும்  -   கடல் உருவில்லா உணக்கு உயிர் எதுவோ  உலவுவதால்  -  காற்று  எழுத்தறியாத உனக்கே வாயும் மொழியும் பல்லாயிரம்  -  இசை குறுகிய வட்டத்தில் ஓடும் பலரது திட்டத்தின் அமைச்சரோ  -  கடிகார நேரம்  அவன் படுத்தே தான் கிடப்பான் தலை உடலில்லாது நம் தலைக்கு மேலே. -  வானம் வெற்று‌ சபையில்  வெற்றி பெற்றவனாய் ஒளிர்கிறான்  -  நட்சத்திரம்  முகவரி இன்றி முகதுதி அமையும் முகமாய் அவனுக் கெது அமைந்திடுதோ  -  ரசனை.

' திருத்தி வழி நடத்த ' ' துரத்தல் தவறில்லை '

நீ பெண்ணெனும் தீயானாய் புகைப்பானாகி நின்றேன் காற்றெனும் காதலில் கரைந்து  வாழ்வை இழந்துவிட்டேன் உள்ளே அழுகை எனக்காய்  ஒரு ஆறுதலுரைக்கிறது காமம் என்தன் கண்ணை  கட்டி கூட்டிபோகிறது இருட்டு உலகில் நடக்கு குருட்டு மனம் துடிக்க - இருளின் சாம்பல் நிறத்தொரு ஒளியில் எனக்கும் வழிகிடைக்க விழியை கட்டிய காமம் அவ்விருளிலும் வழி கொடுக்க எனை திருத்தி வழிநடத்த எத்தவறும் எனை துரத்தி வருவது தவறில்லை.

எல்லாம் அவனே ஆனால் அதில் அவனில்லை

தாயும் விட்டு போவாள் தந்தை விட்டு போவார் உறவும் விட்டு போக இந்த  உலக நியதி தன்னில். இருக்கும் போது யார்க்கும் அருமை புரிவதில்லை இருட்டில் வெளிச்சம் தேடி  அலையும் போது தொல்லை. காமமுறும் பருவம்  காதல் அறிவதில்லை காதல் உடையவர்கு ரத்த உறவின் உயர்வறிவதில்லை ரத்த உறவு உடையவர்கு இந்த உலகு புரிவதில்லை உலகை அடைந்தவர்கள் நிறை பரம்பொருளை அறிவதில்லை ஆதரவற்றவன் அரவணைப்பை தேடுவான் ஆழமாய் அதிலன்பை கொட்டுவான் அப்படியே இந்த பிரபஞ்சந்தன்னில் பிறப்பாய் பாலாய் இறப்பாய் விருப்பாய் வெறுப்பாய் உறுப்பாய் உயர்வாய் தாழ்வாய் நேற்றாய் இன்றாய் நாளையாய் காலையாய் மாலையாய் ஆசையாய் ஓசையாய்  கல்லாய் புல்லாய் சிலையாய் கலையாய் கிளையாய் மரமாய் வரமாய் காமமாய் ஊனமாய் ஞானமாய் தானமாய் தாகமாய் தர்மமாய் தாக்கமாய் ஏக்கமாய் அளவாய் அறிவாய் நோக்கமாய் நீக்கமாய் எங்கும் நீக்கமற யாதும் நீயென  நிறைந்து நிற்கிறாய் இறைவா........... எல்லாம் ஆனவனே ஆனால் நீ  அதில்லில்லை  அறிவால் நாமுணரும் வரை

துறவு

முக்கால் துறந்த முனிவர்கள் முக்கிற்கு முக்கு முப்பது பேர் இத்தனை இருந்து என்ன செய காமக் காலை கடக்கக் கால் முயலலையே சிந்தனை துளிர்ந்த சித்தர்களோ பலர் சந்துக்குள்ளே சங்கமிப்பார் சித்தம் தெளியும் சமயத்திலே  சிக்கித் தவிப்பதை தாண்டத் துணியலையே ஆழமாய் அறியும் முனைப்பிருக்க ஆனிவேரிருப்பதை அறிந்திடலாம் வேரில் பாதிப்பு உள்ளதெனில் விரலின் நகம்போல்  நல்வேருக்கு குறையுடை வேரை மட்டும் வேரறுப்போம். விதையில் கோளா றுள்ளதென்றால் கவலை கொள்ள தேவையில்லை  காலம் கடந்ததும் உரமாகி  எங்கும் நமக்குறுதுணை செய்யும்.

தொடரியிலிருந்து இறங்கி தொடருது பயணம்

ஓடிக் கொண்டே இருப்பதெல்லாம்  ஓர் நாள் ஓய் வெடுத்து விடும் இயற்கையுடன் ஓர் பந்தயத்தில்  நாங்களும் இங்கு பங்கு கொண்டோம்  செயற்கைக்கு துணை ஆகி நின்றோம் தொடரி பெட்டியில் நாங்கள் தொற்றி கொள்ள  தொடங்கிய ஓட்டப் போட்டியிலே தொடரி முன் தொடர்ந்தோடியது இயற்கை பின்னோடியது வென்று விட்டோம் என இறங்குகையில் இன்னும் சிலரதில் பயணம் செய்ய கண்ணோட்டம் மாறியது  எழில் மிகுந்த வளங்கள் நிலையாக இருந்திடவே  தொடரி இங்கு தொடர்கதை‌ யாகிறது இயற்கை தந்த செயற்கையில்  இயற்கைக்கு சதி ஆகிறது.

ஒரு தலை காதல்

ஒற்றை வார்த்தையை கேட்கவும்  அவள் விழி என்னை பார்க்கவும் புலன் மொழியில்‌ பேசுவோம்  புன்சிரிப்பில் நாணுவோம் மனம் கணத்து போகிட காரணம் அவள் அருகில்லை எனும் நினைப்பா இல்லை நம்மை பாடாய் படுத்திடுமிந்த பணத்திடம் உள்ள பிணைப்பா தேடி வருகையில் ஓடி ஒளிகிறாய் காணல் நீராய் காணாமல் போகிறாய்  வாழ்வு மட்டுமல்ல விருப்பமும் ஓர் பயணம் போல தான்  தொடக்கத்தில் மகிழ்வாகவும் முடிகையில் வலியாகவும்  கசாப்பு கடை ஆடுகள் கூட  கத்திக் கொண்டே மடிகிறது காதல் சொல்ல வார்த்தை இன்றி  ஒரு தலை காதலும்  மட்டும் மௌனத்திலேயே முடிவது ஏன்.

மன்னிப்பாயா இப்படிக்கு நலன் விரும்பி

உணர்வான காதலை உறவோடு பார்த்ததால் விரும்பாத அன்பை வற்புறுத்தி தந்ததால் நீ மறக்க நினைக்கையில் உன் முன் வந்து நின்றதால் மதில் மேலே பூனையாய், உன்மனம் இருப்பதால் என் வசமாக்கிட நானிங்கு துடிப்பதால்  விரும்பா என் பேச்சினால் நீ காயப்பட்டதால் விளையாட்டு பிள்ளை என நீ நினைக்க காரணமானதால் என் விதி உன் வழியில் குறுக்கிட்டு செல்வதால்  என் மன வீட்டின் கதவை திறந்து, நீ குடி புகுந்ததனால் மன்னிப்பாயா இப்படிக்கு நலன் விரும்பி 

சமநிலையில் சந்தித்தேன்

மரணம் முடிவே இல்லையடா மனமது மனிதனுக் குள்ளவரை இருவகை எண்ணம் ஆட்கொள்ள பற்றில்லா அந் நிலையொன்றோ மனிதனான என்னை சமநிலை ஆகச் செய்யும் சோறும் நீரும் தேவைபடும் வரையில் ருசியும் பசியும் நம்மை வழிநடத்தும் கடந்து போக நினைக்கையிலே கடமையை எண்ணிப் பார்க்கையிலே  அதுவும் என்னை கட்டிப் போட்டுவிடும் மன்னை விட்டு மடியும் முன்னே இறைவா என்னை நீ வழி நடத்திச் செல் இறையா யாக்கி செல்லாமல் உருப்படும் உரமாய் மாற்றிச் செல் அதுவே நீ தரும் எனக்கோர் பெரும் வரமாகும். சங்கடங்களை நான் தவிர்த்தேன் சிந்தனையால் உன்னை சந்தித்தேன்  என்னை நோக்கி எந்நிலை வந்தாலும் சமநிலையில் உன்னை சந்தித்தேன்.

இயற்கையும், காதலியும் இவ்வகையே

ஆறுத லுரைப்பதும் அவளே அழ வைப்பதும் அவளே கேட்க வைப்பதும் அவளே  விட்டுகொடுக்க வைப்பதும் அவளே எண்ணத்தில் உதிப்பதும் அவளே இதயத்தில் உதைப்பதும் அவளே எழில் மிகுந்தவளே ஏங்கத் தகுந்தவளே இமைக்குள் இனிமை தந்தவளே விழிப்பில் கனவென கலைந்தவளே விதை க்கும் மண்ணெனும் கல் லறை ஆனேன்  என்னிலிருந்து முளைத்து எனக்கே புல்லெனும் கல்லறை ஆனவளே உனை அறுத்தெரிவோர் இருந்தாலும் உதிரும் உன் வித்துக்குயிர் தர நானிருப்பேன் காலமும் காதலும் மாறிவிடும்  கருவான இயல்பது மாறாது‌‌ உலகத்தில் இயற்கையாய் உள்ளத்து காதலியாய்‌.

துணை செய்க திருத்துணையே

உறவென்று சொல்வதா உயிரென்று சொல்வதா உடன் வருவோன்/ள் என சொல்வதா உடன் படுவோர்/ள் என சொல்வதா அறியாமலும் தெரியாமலும் ஆறுதலுரைப்பார் தோள் மீது கையிட்டு தோள் தந்திடுவார் தோல் கொண்ட உடலுக்கு மேல் கவசமாகி  உடைகாக்கும் மானம் போல் உயிர் காத்து நிற்பார் துணிவாக இருப்பார்  நமக்குறுதுணை யோடுமிருப்பார் வாழ்க்கை எனும் புத்தகத்தில் தாள்களாகும் இவர்கள் வரும் தயக்கத்தை தகர்த்தெரியும் வாள்களாகிருப்பார் உருவறியா தெய்வம் போல் உயிர் தந்த அன்னை போல் வழிகாட்டும் ஆசானாய் வழிநடத்தும் நண்பனாய் செல்வம் சேர்க்கும் தந்தையாய் செல்ல குட்டி குழந்தையாய் பட்டறிவு பாட்டுரைக்கும் பாட்டன் பாட்டியாய் தாலியில் உயிர் தாங்கும் தர்ம பத்தினியாய் யார் தான் நிலைத் துணை  எனத் தெரியாது ஆதலால் அத் துணைக்கும் துணை செய்க திருத்துணையே.

விருப்பமா

விரும்பாத வாழ்க்கையில்  விரும்பிட தான் எத்தனை, துரும்பாகி போனாலும்  துரத்தும் காந்தம் எத்தனை. காந்தம் உடையும் போதிலே மீண்டும் சேர மறுக்குதே, மன முடைந்த மனிதனுக்கு மட்டுமிங்கு மீண்டும் ஆசை பிறப்பதேன். தீண்டும் யாவுமிங்கு ஆசை தூண்டி செல்லும், அதை தாண்டி வாழப் பழக சில தடைகள் தந்து செல்லும். விடைகள் சொல்லும் வாழ்க்கை தேவையை மட்டுமே தேடலாக்க சொல்லும். அலைந்து திரிந்து தேடும் யாவும் தேவையாகிடாது அலைய வைக்கும் யாவும்  யாவருக்கும் தேவைபட்டிடாது.

காகித கப்பல்

ஏனோ தெரியவில்லை ஏக்கம் தாங்கவில்லை தாக்கம் குறையவில்லை மனதும் தூங்கவில்லையே உண்மை புரியவில்லை ஆசை ஓயவில்லை ஆவல் குறையவில்லை மறக்கவும் முடியவில்லையே காதல் கிடைப்பதில்லை காலம் அழிவதில்லை நினைவை இழக்கவில்லை நிழல் கூட தொடர்வதில்லையே அது தாளில் செய்து  தானாய் நகர்ந்த காணாமல் போவதற்காய் ஊரிப்போக காத்திருந்த  நீரில் விட்ட காகித கப்பல்

மனிதனுக்கும் இயற்கைக்கும்

பாதி அழிந்து மீதியாய்  வீதியோரம் வளர்கிறது ஊரெங்கும் வெளிச்சத்தில் இருட்டொன்றே இருக்கிறது ஜாதி மனிதனின் பிறப்பிலென்று  சமகாலக் கூற்றாகுது ஆதி மனிதன் வாழ்ந்ததை நாகரிகம் தூற்றுது சாளரத்தின் வழியாக சாரல் வந்து வீசுது  மழையோனு எதிர் பார்த்த போது ஈரத்துணி காத்துல தன்னால காயுது துடுப்பின்றி காற்றோடு  கடலோடும் படகாடுது திசை தெரியாமல் போகும் போது கரை சேர்க்கும் அலையும் அழகாகுது பொது வென்று எண்ணிவிடு உனதுட்பட அதிலுண்டு உனதென்று எண்ணாதே பொதுவுடமையை நீ உண்டு பாசத்தில் மாட்டாமல்  பற்றின்றி விலகு அப்போதே உனை பற்றும் இப் பரந்த பூவுலகு

இது தான் இயற்கை

அங்கங்கே அழகான  வான்முகில் கூட்டம் அதை கண்டு ஆடுகிற  அழகு மயிலாட்டம் வீசாதோ என்றந்த  தென்றல் மேல் நாட்டம் அதிர்வுகளால் ஆடாத குளமோ அழகாக வின் பிம்பங்காட்டும் விழுதோ வேரோ  எதுவென தெரியாதிருக்கும் பலர் அதன் நிழலில் நிற்கும் போதே அதற்கும் மதிப்பிருக்கும் தேயாத நிலவெனில் நினைக்காமல் இருந்திருப்போம் முழு இரவும் முழு நிலவும் ஆனதனால் மனதோடு மயக்கந் தரும் சாலையில் காலடி  எடுத்து வைக்கிறோம் இருந்தும் அங்கே  நகர்வது தரைபோல் பிம்பம் நீரில் நாமும் பார்க்கிறோம் அருகில் பார்த்தால் அது அங்கில்லை. இது தான் இயற்கை.

மாறுவோம்

எல்லோரும் இங்கெல்லாமுமாக நினைக்கிறோம் ஆனால் நாம் அதற்காகவா  பிறக்கிறோம் இல்லாரோடிவ் வுலகில் தான் வாழ்கிறோம் இருப்பதை இறைக்க எங்கு நினைக்கிறோம் மீதத்தை வீதம் பிரித்து மறைத்து சேர்க்க பார்க்கிறோம் பஞ்ச பூதத்தை நாம் மறந்து  பாவத்தை செய்கிறோம் நெஞ்சத்திற் கழுக்கை தந்து புழுவாக ஆகிறோம் ஆனால் அதற்கு மாறாக மண்ணிற்கும் பயனன்றி வாழ்கிறோம்.  மாற்றான் மன உறுதி கண்டு  நம் மன நிம்மதி இழக்கிறோம் அவன் குருதி சிந்தும் வேளையில்  ஈகை மறந்து இன்முகத்தோடு இருக்க நினைக்கிறோம் இப்படியே இருந்து இருந்து  இழந்து தொலைக்கும் வாழ்க்கையில் அன்பு நெறி இன்பமுகம் ஒழுகி தினம்  ஒழுக்கத்தோடு வாழுவோம்.

நாளைய சமூகம்

தற்கொலைகள் தடுக்க மாடியில்லா கட்டிடம் மறைவில்லா வகுப்பறை வலையமற்ற மேற்கூறை வகுப்பறையை சுற்றி சுற்றி  பெற்றோர்க்கு வசிப்பிடம் தன்னம்பிக்கை வளர்க்க  இறைவனை மட்டும் நம்பிவிடு பாடம் மட்டும் பயனில்லை பயன் படுத்தும்  அறிவை அறிந்துப் பாடமெடு ஆண்டவன் வரலாற்றையும் அகற்றிவிடு அரசியலால் ஆண்டவனின் வரலாற்றையும் அழித்துவிடு.  அவசியமானது அறிவு அதை அறிந்திட தானிந்த படிப்பு முன்னுரிமை பெறவே தேர்ச்சி அது முட்டாள் என்பதற்காகாது சாட்சி காலத்தில் இந்நிலையில்  குழந்தையை தன்னிடத்தில் பொறுப்பாய் பார்த்து கொள்ளாதார் பெற்றோர் என்பதற்கே பொருள் சேர்க்காதார். நானுட்பட எல்லோரும் நல்லோராகி  நற்சமூகத்தை உருவாக்கிடுவோம்

வானம் தாண்டிய உலகு

அழகிய நீல வானம்  பறவை தனதுலகாய் அதை ஆளும் மேக தரையில் காலூன்றி  வேகமாய் சிறகசைவின்றி நகர்ந்தோடும் உயர பறக்க உணவு கிடைக்குமிட மெதுவோ உணவாக இறைதேடி அலைந்திடுமோ இல்லை உணர்வாக இறையோடு இயங்கிடுமோ கீழிருக்கும் உயிரினமே கீழாகத் தோன்றிடுமோ பார் பறந்தார் போல பறப்பதற்கு சிறகு சிதையாமல் பார்த்துக்கொள் நீ விரும்பும் உலகு

பயணத்தில்

சூடு பறக்குற சாயா ஒரு புறம் நறுமணப்  பூவை  விக்கிற ஆயா. ஓடி விளையாடுற குழந்த நாக்கு நல்ல  ருசிய தருமந்த எலந்த. தூரத்தில் தெரியுது மலை தான் அழகிய இயற்கைக்கு இது பெரும் கலைதான் செம்மண் வாசம் வீசுற பூமி மாலை நேரச் செங்கதிர் வானக் காமி மேல பறந்த அந்நேரம் கீழே பாத்தேன்  ஊரே ஒரு புள்ளி கோலம் நிலவ பார்க்கிற போதும் அந்த விண்மீன் படை வியப்பினை கூட்டும் நிமிர்ந்து நடந்திடும் போதும்  தரை நகர்வதை என் கால் காட்டும் எல்லை இல்லா தொலைவின்  வண்ணம் நீலம்  அடர் இருளது விடியும் வரை தான் நீளும்.

நட்புக்(குடி) கெட்டது

நட்பு னு சொல்லிக்க நாம ரெண்டு பேருடா சுத்தி திரிஞ்சே உறவாடுனோம் அது நம்ம ஊருடா அப்படி இப்படி இருந்த காலம் நீ இறந்த காலத்தில் கலந்தாச்சுடா கூட்டா சுத்தி வந்தோம் கூட்டாளி போல இப்ப நா தேடுறேன் டா உன்ன காணல நேத்து வாழ்க்கைய நா நெனச்சு பாக்கல கூப்பிட்ட நேரத்துல என்னால் வர முடியல அன்னக்கினு பாத்து எனக்கு குடிக்க கூட புடிக்கல உதவினு கேட்ட போது பொய்யுனு நா நெனசிட்டேன்  அதனால தானே மச்சான் உன்ன இப்ப தொளச்சிட்டேன் Glassஅ பாக்குறப்பலாம் உன்னுடைய நியாபகம் Clauseஆ இருந்த நட்புக்கு செஞ்சிபுட்டேன் பாதகம் அடிச்ச சரக்கு கூட சீக்கிரமா தெளிஞ்சுடும் போன உன் உசுர - என்  மனசு என்னக்கும் நெனச்சிடும்.

உணர்வுடல்

மனிதனாக பிறந்தது தப்பா மனிதநேயம் மறந்தது தப்பா நாடென்பதே வசிப்பிடமப்பா நாடி வாழ்வை நீ நடத்திடப்பா நானென்பது உயிரா உடலா வாழ காரணம் உணவா உறவா உயர காரணம் உழைப்பா பறிப்பா தேட காரணம் ஆசையா தேவையா படிப்பின் பின்புலம் அறிவா பணமா அழகென்பது நிறமா குணமா நிழலென்பது இருளா துணையா தனிமை அது தவிப்பா வரமா உலகென்பது பொதுவா சுயமா உயிரென்பது துடிப்பா காற்றா கடவுள் இங்கு உணர்வா கலையா  இத்தனைக்கும் காரணமாம் உடல் சுகமும் தசையும் மட்டும் தானோ. 

சாக்கடையே

மயிருக்கு செருப்பென இருக்கும்  மண்டைக்குள் மத மெதற்கு? உயிருக்கே கேடாய் இருக்கும் மதத்திற்கொரு இறையெதற்கு? மானம் காத்திட உடையணிவாய் அதை இழிந்தால் உடையிருந்தும் மானமற்று தான் திரிவாய் எழில் வர்ணத்தில்  எல்லாம் வல்லவனை வைக்காதீர் எண்ணத்தில் இல்லா இறைவனை  எங்கு நோக்கிலும் இடராய் தினிக்காதீர்.  மதமது மதமென மாறிவிட்டால் மதியதை மதமது மிதித்துவிடும் விதியது உள்ள வாழ்க்கையிலே  வினையது வலியது முடிவின் கதியதுவாகிவிடும். புத்தகம் புரட்டும் கைகளுக்கும் கரும்பலகை நோக்கும் கண்களுக்கும் நற்கருத்தை கேட்கும் செவிகளுக்கும் நாளும் களிக்கும் நட்பிற்கும் சாதியு மதமும் சாக்கடையே.  இஸ்லாமேசிந்து ( இஸ்லாம் ஏசு இந்து ) என்று  எல்லோரும் பிரிந்துள்ளோம் எஞ்ஞான்றும் மனிதரென்று யாரேனும் தானுளரோ மனிதராக முடியாதார்  பிறந்தென்ன இறந்தென்ன. 

முதுமைக்காதல்

பால் பருகும் குழந்தை  ஈரல் கிழிந்து பல் முளைக்கும் வேளையில் பசியென்று கல்லுண்ணப் போவது போல் எண்ணுதற்கினிய காதல்  எத்தனை அழகோ அத்தனையும் இனிமையே முறையற்ற காதல் அறிவின் முதர்சிக் காதல் முதுமையிலும் துணையாகி இத்தனையிலும் இதுவும் புதுமைக்காதல் விதி முடியும் காலத்திலும்  பதியெனும் கணவனின் கதியாவதில் கொம்பூனி நடக்கையிலும் கை ஊட்டும் சோற்றை உண்பதில். ஓடி உழைத்து வாழ்கையில் அவளை அழைத்து அழகு பார்த்தவன் ஓய்ந்த காலம் வந்த போதும் அவளை அணைக்க ஆறுத லாதலும் முதுமை காதலே இனக்கவர்ச்சி இன்பத்தால் இதயத்தில் இடம் கொடுத்து கனவோடு வாழ்க்கையில் காணாமல் போன காதலும்  முதுமை காதலே.  முதுமையது, வயதில் மட்டுமுள்ளதல்ல, காதலது பெண்கள் மட்டும் சார்ந்ததல்ல வெறியற்ற விருப்பம் காதலாகும் அது முடியும் வரை வாழுமெனில் முதுமைக்காதல் முற்றில் அழகே.